பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் அதிகம் பேசப்பட்ட நபர் தனலக்ஷ்மி.
ஜி.பி.முத்து வெளியேறிய பின்பு டல் அடித்த பிக்பாஸ் தனலக்ஷ்மியால் சூடுபிடித்தது. ஆனால் அவர் வெளியேறியது பலரை அதிர்ச்சி அடைய வைத்தது.
குறிப்பாக இந்த சீசனில் முதன்முதலில் குறும்படம் போடப்பட்டது தனலட்சுமிக்காக தான். பொம்மை டாஸ்க்கில் அசீம் அவர்மீது வைத்த குற்றச்சாட்டை குறும்படம் போட்டு அது பொய் என நிரூபித்தார் கமல்ஹாசன்.
இவ்வாறு பரபரப்புக்கு பஞ்சமில்லாத போட்டியாளராக இருந்து வந்த தனலட்சுமி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆனது ஆச்சரியம்.
இந்நிலையில் வெளியேறி 10 நாளாகியும் எந்த பேட்டியும் கொடுக்காத தனலக்ஷ்மி தற்போது லைவில் பேட்டி கொடுத்துள்ளார்.