
கொரோனா ரணகளத்திலும் அமெரிக்காவில் நடக்கும் அரசியல் அக்கப்போர்!
வாஷிங்டன் (21 மே 2020): கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரையை சாப்பிடுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருப்பது அமெரிக் அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்கா. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், மலேரியாவுக்கு தரப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா உட்பட பல நாடுகள் இம்மருந்தை பரிந்துரைக்கின்றன. இந்த மாத்திரையை அதிகளவில் உற்பத்தி செய்யும் இந்தியாவை மிரட்டி, லட்சக்கணக்கான மாத்திரைகளை அமெரிக்கா…