
இந்தியாவில் கோவிட் மூன்றாவது அலை குறித்து இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை!
புதுடெல்லி (12 ஜூலை 2021); கோவிட் -19 நோய்த்தொற்றின் மூன்றாவது அலைக்கு வெகுஜனக் கூட்டங்கள் ‘சூப்பர் ஸ்ப்ரெடர்களாக’ மாற வாய்ப்புள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கோவிட்- நடைமுறையை குறைந்தபட்சம் இன்னும் மூன்று மாதங்களுக்கு கண்டிப்பாக அமல்படுத்துமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளை ஐ.எம்.ஏ வலியுறுத்தியுள்ளது. “சுற்றுலா , யாத்திரை பயணம், மத சடங்குகள் அனைத்தும் தேவையானதுதான் , ஆனால் அவற்றிற்கு இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும்…