இந்தியாவுடனான வர்த்தக உறவு துண்டிப்பு – தாலிபான் அறிவிப்பு!

புதுடெல்லி (19 ஆக 2021): இந்தியாவுடனான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி உறவை துண்டிப்பதாக தாலிபான் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 20 வருடங்களாக அமெரிக்க ஆதரவு அரச படைகளுக்கும், அங்கு 2001க்கு முன்பு ஆட்சியில் இருந்த தாலிபன்களுக்கும் இடையே சண்டை நடந்து வந்தது. கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி தாலிபன்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை எந்த சண்டையுமின்றி கைப்பற்றியதால் கடந்த 20 வருடங்களாக நடந்து வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. அதிபர் மாளிகையை கைப்பற்றிய பின்னர், போர் முடிந்துவிட்டதாக…

மேலும்...

கத்தாருக்கு வந்த இந்திய கடற்படைக் கப்பல்!

தோஹா (10 ஆக 2021): இந்திய கடற்படையின் கப்பல் Trikand (ஐஎன்எஸ் திரிகாந்த்) கத்தார் தலைநகர் தோஹாவை வந்தடைந்தது. ஐந்து நாள் கடற்படைப் பயிற்சிக்காக இக் கப்பல் தோஹாவிற்கு வந்திருக்கிறது. கேப்டன் ஹரீஷ் பகுகுனா தலைமையில் வந்திருக்கும் இந்தக் கப்பலை, கத்தார் கடற்படையின் பிரதிநிதிகள் வரவேற்றனர். இதில் இரு நாட்டு கடற்படைகளின் பங்கேற்புடன் கூட்டுப் பயிற்சி நடைபெறும். இந்தப் பயிற்சியில் விமானப் பாதுகாப்பு, கடல்சார் கண்காணிப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும் உள்ளடங்கி இருக்கும். துறைமுகத்தில்…

மேலும்...

இந்திய பயணிகளை ஏற்க ஃப்ளை துபாய் விமான நிறுவனம் மறுப்பு!

துபாய் (06 ஆக 2021): இந்திய பயணிகளை ஏற்க இயலாது என்று ஃப்ளை துபாய் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியா உட்பட ஆறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் மீதான பயணத் தடையை ஐக்கிய அரபு அமீரகம் நேற்று தளர்த்தியது. UAE விசா வைத்திருப்பவர்களுக்கு, ஐக்கிய அரபு அமீரகம் வருவதற்கு நேற்று முதல் அனுமதிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, விமான நிறுவனங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யத் தொடங்கின. அதேவேளை ஃப்ளை துபாய் அல்லாத விமான நிறுவனங்களால் மட்டுமே முன்பதிவுகள் நடைபெறுகின்றன. ஆனால்…

மேலும்...

இந்திய பெண்கள் ஹாக்கி அணிக்காக பெருமை கொள்வோம்!

புதுடெல்லி (06 ஆக 2021): டோக்கியோ ஒலிம்பிக்கில் வெற்றி பெற முடியாவிட்டாலும், இந்திய பெண்கள் பெருமையுடன் ஹாக்கி மைதானத்தை விட்டு வெளியேறுகிறார்கள். டோக்கியோ ஒலிம்பிக்கில் அரையிறுதி வரை சென்ற இந்திய பெண்கள் ஹாக்கி அணி, வெண்கலப் பதக்கப் போட்டியில், பிரிட்டனிடம் 4-3 என்ற கணக்கில் தோற்றனர். அரையிறுதி வரை சென்ற இந்திய ஹாக்கி பெண்கள் அணிக்கு இந்தியர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய பிரதமர் மோடியும் ஹாக்கி அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். We will…

மேலும்...

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம்!

டோக்கியோ (04 ஆக 2021): டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் குத்துசண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். பெண்கள் குத்துசண்டை 69 கிலோ – இந்தியாவின் லவ்லினா போர்கோஹெய்ன் அரை யிறுதிக்கு தகுதி பெற்று இருந்தார். முதல்நிலை வீராங்கனையான துருக்கி நாட்டின் சுர்மெனெலியுடன் அரையிறுதிப் போட்டியில் லவ்லினா மோதினார். முதல் சுற்றில் தாக்குதல் ஆட்டத்தை தொடங்கிய சுர்மெலிக்கு 5 நடுவர்களும் 10 புள்ளிகள் அளித்தனர்.இரண்டாவது சுற்றிலும் அவரது செல்வாக்குத் தொடர்ந்தது. காலிறுதிப் போட்டியில், லவ்லினா 4-1 என்ற…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு சவூதி வரும் இந்தியர்களுக்கு உதவலாம்!

துபாய் (04 ஆக 2021): ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான தடை நீக்கம் சவூதி வர காத்திருக்கும் இந்தியர்களுக்கு உதவக்கூடும். இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை ஐக்கிய அரபு அமீரகம் நேற்று நீக்கி உத்தரவிட்டது. இதனால் இந்தியாவிலிருந்து துபாய் வராமல் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். துபாயின் இந்த அறிவிப்பு சவூதி வரும் இந்தியர்களுக்கு உதவக்கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஏற்கனவே கத்தர் வழியாக வரும் இந்தியர்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு ஹோட்டல் கிடைக்காததால் பலர் சிக்கித்தவித்துள்ளனர்….

மேலும்...

கத்தார் வழியாக சவூதி செல்லும் இந்தியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்!

தோஹா (04 ஆக 2021): தற்போது சவூதி அரேபியாவிற்கு செல்வோர் நேரடியாக செல்லமுடியாத நிலை உள்ளது. எனவே சவூதி அரேபியா பயணத் தடை செய்யாத மூன்றாவது நாட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்த பின்னரே சவூதி செல்ல முடியும். இந்நிலையில் தற்போது இந்தியர்கள் சவூதி செல்ல வழித்தடமாக கத்தாரை தேர்ந்தெடுக்கின்றனர். அதேவேளை கத்தார் வழியாக வருபவர்கள் கத்தார் மற்றும் சவுதி அங்கிகரித்த இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும். மேலும் கத்தாரில் தங்குவதற்கு ஏஜெண்டுகள் நீண்ட கால…

மேலும்...

இந்தியாவிலிருந்து துபாய் செல்ல விமானங்களுக்கு டிக்கெட் புக்கிங் தொடக்கம்!

துபாய் (03 ஆக 2021): இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை ஐக்கிய அரபு அமீரகம் நீக்கியுள்ள நிலையில், விமான நிறுவனங்கள் ஆன்லைன் புக்கிங்கை தொடங்கியுள்ளன. கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக விமானப் பயணத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்திருந்தது. இத் தடையை நீக்கியுள்ள அமீரகம், இரண்டு முறை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை எடுத்துக் கொண்ட இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்புவதற்கான விசா வைத்திருப்பவர்கள் துபாய்க்கு திரும்பலாம் என அறிவிக்கப்…

மேலும்...

துபாய், இந்தியா இடையேயான பயணத் தடை நீக்கம்!

துபாய் (03 ஆக 2021): இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை ஐக்கிய அரபு அமீரகம் நீக்குகிறது. கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக விமானப் பயணத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்திருந்தது. இந்த தடையை நீக்கியுள்ள அமீரகம் , இரண்டு முறை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை எடுத்துக் கொண்ட ஐக்கிய அரபு அமீரக விசா வைத்திருப்பவர்கள் துபாய்க்கு திரும்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5 முதல் இது அமலுக்கு வருகிறது. கோவிட் பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து இந்தியா,…

மேலும்...

கத்தார் இந்தியா இடையே கோஃபார்ஸ்ட் புதிய பட்ஜெட் விமான சேவை!

தோஹா (02 ஆக் 2021): கத்தார் –  இந்தியா இடையே மற்றும் ஒரு விமான சேவையாக கோஃபர்ஸ்ட் ஏர்லைன்ஸ் விமான சேவை தொடங்கவுள்ளது. இந்தியாவின் பட்ஜெட் விமானமான நிறுவனமான கோ ஏர் ஏர்லைன்ஸ் அதன் பெயரை கோஃபர்ஸ்ட் ஏர்லைன்ஸ் என மாற்றியுள்ளது. இது கொச்சி தோஹா இடையே வாரம் இருமுறை (வியாழன் மற்றும் சனிக்கிழமை) தனது விமான சேவையை நடத்தும். அதேபோல கண்ணுர் தோஹா இடையே வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விமான சேவையை நடத்தும். மேலும் தோஹாவிலிருந்து…

மேலும்...