விஜய்-யைப் பாதுகாக்கிறதா திமுக?! விஜய் இன்னும் கைது செய்யப் படாதது ஏன்?

விஜய்-யைப் பாதுகாக்கிறதா திமுக?! விஜய் இன்னும் கைது செய்யப் படாதது ஏன்?

கரூர் (03 அக் 2025): தவெக தலைவரும் நடிகருமான விஜய்-யின் கரூர் “ரோட் ஷோ” வில் நடந்த மரணங்களுக்கு தவெக தலைவர்களின் பொறுப்பற்ற, முன்னேற்பாடற்ற, தற்குறித்தனமான செயல்பாடுகள்தான் காரணம் என உயர் நீதிமன்றம் கிட்டத்தட்ட உறுதிபடுத்தி விட்டது. கடந்த வாரம் முழுக்க நடந்த தீவிர விசாரணை, வழக்குகளைத் தொடர்ந்து நீதிமன்றம் காட்டமான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை 27 செப் 2025 அன்று, கரூர் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொண்ட “ரோட் ஷோ”…

மேலும்...
கரூர் அசம்பாவிதம் சதியா? யார் பொறுப்பு? - Fact Check Report

கரூர் அசம்பாவிதம் சதியா? யார் பொறுப்பு? – Fact Check Report

கரூர் (01 அக் 2025): கடந்த சனிக்கிழமை 27 செப் 2025 அன்று, கரூர் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொண்ட “ரோட் ஷோ” பரப்புரையில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இச் சம்பவம் தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பலியான 41 பேரில் 11 குழந்தைகள் மற்றும் 18 பெண்கள் அடங்குவர். தவெக தலைவர் நடிகர் விஜயின் கரூர் வாகனப் பரப்புரையில் நடந்த அசம்பாவிதத்துக்கு உண்மையான காரணம் என்ன?…

மேலும்...

கொரோனா பாதிகப்பட்டால் உதவ தயார் நிலையில் இலவச ஆம்புலன்ஸ் – VIDEO

கரூர் (18 மார்ச் 2020): கரூர் எம்.ஆர்.வி டிரஸ்ட் மற்றும் கொங்கு ஆம்புலன்ஸ் இணைந்து கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு உதவ கொங்கு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலையடுத்து ஆங்காங்கே பொதுமக்கள் பெருமளவில் அச்சத்திற்குள்ளாகியுள்ள நிலையில். இந்தியாவில் ஒரு சில இடங்களிலும், ஒரு சில மாநிலங்களிலும் பரவிவரும் இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரிக்கின்றது. இந்நிலையில், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள்…

மேலும்...

கரூரில் கலகலப்பு – எடப்பாடியை வரவேற்ற திமுக -VIDEO

கரூர் (06 மார்ச் 2020): தமிழக முதல்வரும், அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமியை கரூரில் வரவேற்க அதிமுக கொடிகள் ஏற்றப்பட்ட நிலையில் திமுக கொடியும் இடையே பறந்து கலகலப்பூட்டியது. தமிழக முதல்வரும், அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி கரூருக்கு வியாழன் அன்று வந்தார். கரூர் அடுத்த காந்திகிராமத்தில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டு முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 5 ஆம் தேதி அன்று தமிழக…

மேலும்...

மாநில அளவிலான கபடி போட்டி – வீடியோ!

கரூர் (03 மார்ச் 2020): கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான கபாடி போட்டியில் முதல் பரிசை கரூர் அணி தட்டிச் சென்றது. வெற்றி லெற்ற அணிகளுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து பரிசுகளை வழங்கினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் வடக்கு நகர அதிமுக சார்பில் மாநில அளவிலான கபாடி போட்டி நேற்று மாலையில் துவங்கியது. இந்த போட்டிகளில் சென்னை, கரூர், மதுரை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து…

மேலும்...

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மாட்டு வண்டி போட்டி – வீடியோ!

கரூர் (02 மார்ச் 2020): கரூர் அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி நடைபெற்ற மாட்டு வண்டி எல்லை பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரிசுகளை வழங்கி பாராட்டினார். கரூர் மாவட்டம் மணவாடி ஊராட்சி அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. இந்தப் போட்டிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார். பெரிய மாடு,…

மேலும்...

பஞ்சாயத்து தலைவராக வித்தியாசமாக பதவியேற்ற 70 வயது முன்னாள் தலைமை ஆசிரியர்!

கரூர் (10 ஜன 2020): கரூர் அருகே ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை ஆசிரியர் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளையும், முருங்கை விதைகளையும் மக்களுக்கு கொடுத்து பஞ்சாயத்து தலைவராக பதவியேற்றுக் கொண்டார். கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வரவனை பஞ்சாயத்து தலைவராக தற்போது பொறுப்பேற்றுள்ளவர் எம்.கந்தசாமி, ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவர் 70 வயதிலும் ஏழை மக்களுக்கு சேவை செய்ய அவருக்கு மக்களே அழைப்பு விட்ட நிலையில், திடீரென்று பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இருப்பினும் இவருடன்…

மேலும்...

கரூரில் ருசிகரம் – ஒரு கிலோ உப்பு ரூ 33,000!

கரூர் (05 ஜன 2020): கருவூர் வாழ் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமுதாய மக்களின் உலகளாவிய சமுதாய நோன்பு விழாவான பிள்ளையார் நோன்பு விழா 31.12.2019, செவ்வாய்கிழமை மாலை பி.எல்.ஏ. திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி தலைவர் அக்ரி சுப.செந்தில்நாதன் தலைமையில் பொருளர் கும.குமரப்பன் முன்னிலையில் நடைபெற்றது. செயலாளர் மேலை பழநியப்பன் நோன்பின் மாண்பினை விளக்கிக் கூறி வரவேற்புரை ஆற்றினார். சமூகப் பெரியவர்கள் வைரவன், அருணாசலம் கெளரவிக்கப்பட்டு அவர்கள் இளை எடுத்து நோன்பு களைந்து பின் அவர்கள் கூடியிருந்த…

மேலும்...