தப்லீக் ஜமாத்தினர் மீது வீண்பழி – அரசு மற்றும் ஊடகங்கள் மீது மும்பை நீதிமன்றம் பரபரப்பு குற்றச்சாட்டு!
மும்பை (23 ஆக 2020): கொரோனா பரவலுக்கு வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினரை அரசு பலிகடா ஆக்கியுள்ளது என்று மும்பை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. மும்பை உயர் நீதிமன்றத்தின் (அவுரங்காபாத் பெஞ்ச்) நீதிபதி டி.வி.நலாவடே மற்றும் நீதிபதி எம்.ஜி. செவ்லிகர் ஆகியோர் கொண்ட அமர்வு டெல்லியில் மார்கஸ் தப்லீக்கில் கலந்து கொண்ட பல இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினருக்கு எதிரான முதல் தகவல் அறிக்கைகளையும் ரத்து செய்தனர். டெல்லியில் மார்கஸில் கலந்து கொண்ட தப்லீக் வெளிநாட்டினரை பலிகடாக்களாக தேர்வு…
