கொரோனா வைரஸ் இறப்பை கட்டுப்படுத்தும் டெக்ஸாமெதாசோன் – மகிழ்ச்சியான தகவல்!

லண்டன் (17 ஜூன் 2020): டெக்ஸாம்தாசோன் என்னும் மருந்து வகை கொரோனா வைரஸ் இறப்பை மூன்றில் ஒன்றாக குறைத்துள்ளதாக ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் இந்த தகவல் மருத்துவ உலகில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கையில், இந்த ஆய்வு ஒரு பெரிய, கடுமையான சோதனையாகும். இது 2,104 நோயாளிகளை தோராயமாக மருந்து பெற நியமித்தது மற்றும் 4,321 நோயாளிகளுக்கு வழக்கமான கவனிப்பை மட்டுமே அளிக்கிறது. மருந்து வாய்வழியாகவோ…

மேலும்...

ஹெல்ப்குரூப் திருவை சார்பில் மலைவாழ் கிராமங்களுக்கு அத்திவாசிய உதவி!

திருவை (16 ஜூன் 2020): ஹெல்ப்குரூப்திருவை சார்பில் பரளியாறு, வாழயத்து வயல், கீரிப்பாறை, பால்குளம் போன்ற பகுதிகளில் வாழும் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளர்களின் 355 குடும்பங்களுக்கு  ரூபாய் 2,48,500(இரண்டு லட்சத்து நாற்பத்து எட்டாயிரத்து ஐந்நூறு) மதிப்பிலான மளிகை பொருட்கள் அடங்கிய கிட் வழங்கப்பட்டது மேலும் மலைவாழ் கிராமங்கள் புறத்தி மலை , வெள்ளருக்கு மலை, வட்டப்பாறை, போன்ற கிராமங்களுக்கு 90 குடும்பங்களுக்கு ரூபாய் 63,000/-செலவில் மளிகை பொருட்கள் அடங்கிய kit வழங்கப்பட்டது.மேலும் அனைத்து குடும்பங்களுக்கும் முகக்கவசம்…

மேலும்...

இதுதான் குஜராத் மாடல் – கொரோனா உயிரிழப்பு அதிகம் குஜராத்தில்தான்: ராகுல் காந்தி!

புதுடெல்லி (16 ஜூன் 2020): நாட்டில் குஜராத் மாநிலத்திலேயே கொரோனா உயிரிழப்புகள் அதிகம் காணப்படுகிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பாஜக குஜராத் மாடலை முன்வைத்தே பிரச்சாரம் மேற்கொண்டு ஆட்சியை கைபற்றியது. ஆனால் பல விவகாரங்களில் குஜராத்தின் உண்மை முகம் அம்பலப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு அதிகம் குஜராத்தில்தான் என்று ராகுல் காந்தி புள்ளி விவரங்களுடன் விவரித்துள்ளார். நாட்டில் கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில்…

மேலும்...

தப்லீக் ஜமாத்தினர் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

மதுரை (16 ஜூன் 2020): வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் அவரவர் நாடுகளுக்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சுற்றுலா விசா மீறல், உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைதான 31 தப்லீக் ஜமாத்தினருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம். அவர்கள் அனுபவித்த தண்டனை காலமே அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு போதுமானது என கூறி அவர்களை அவரவர்கள் நாடுகளுக்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. வங்கதேசம், இந்தோனேசியா…

மேலும்...

நீதிமன்றம் செல்வதை தவிர வேறு வழியில்லை – ஸ்டாலின் திட்டவட்டம்!

சென்னை (16 ஜூன் 2020): கொரோனா பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காணாவிட்டால் திமுக நீதிமன்றத்தை நாடும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் அடங்காமல் மேலும் பரவி வருகிறது. தமிழகத்தில் மே 31ம் தேதிவரை அதாவது 71 நாட்களில் 176 பேர் இறந்திருக்கிறார்கள். அடுத்த 15 நாட்களுக்குள் மட்டும் 259 பேர் இறந்திருக்கிறார்கள். இதனைப் பார்த்து மாநில அரசாங்கத்துக்கு…

மேலும்...

போற போக்கை பார்த்தால் யாரும் வாகனமே வாங்க மாட்டங்க போல!

சென்னை (16 ஜூன் 2020): பெட்ரொல், டீசல் விலை உயர்வால் பலருக்கு வாகனம் வாங்கும் ஆசையே போய்விடது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் நிர்ணயிக்கின்றன. ஆனால், கடந்த மார்ச் 16ம் தேதிக்கு பிறகு விலையை மாற்றி அமைக்கவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 20 டாலருக்கும் கீழ்…

மேலும்...

இறந்த இந்து கொரோனா நோயாளிகளை இந்து முறைப்படி அடக்கம் செய்யும் முஸ்லிம் தன்னார்வலர்கள்!

புதுச்சேரி (15 ஜூன் 2020): இறந்த இந்து கொரோனா நோயாளியை இந்து முறைப்படி அடக்கம் செய்து தங்களையும் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர். முஸ்லிம் தன்னார்வலர்கள். புதுச்சேரியில் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களை சரிவர அடக்கம் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதற்காக சில ஆதாரங்களையும் காண முடிந்தது. இந்நிலையில் கொரோனா நோயாளிகள் யாரானாலும் அவர்களை அவரவர்களின் மத வழக்கப்படி இறுதி சடங்கு செய்ய முன் வந்தனர் பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர். இதற்காக அவர்களுக்கு அனுமதி கடிதத்தையும்…

மேலும்...

கொரோனா நோயாளிகளுக்காக விப்ரோ ஐடி நிறுவனத்தை மருத்துவமனையாக மாற்றிய அஜீம் பிரேம்ஜி!

புனே (15 ஜூன் 2020): கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அஜீம் பிரேம்ஜியின் புனே ஐடி நிறுவனம் 450 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராட நிதியுதவி அளித்தவர்களில் உலகின் மூன்றாவது பெரிய தனியார் நன்கொடையாளராக உள்ளவர் விப்ரோ நிறுவன தலைவர் அஜீம் பிரேம்ஜி. மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் அதி வேகத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் , இந்தியாவின் முன்னணி வணிக அதிபரும் விப்ரோ நிறுவனருமான அசிம் பிரேம்ஜி, கொரோனா…

மேலும்...

அடுத்த அதிர்ச்சி – தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 44 பேர் மரணம்!

சென்னை (15 ஜூன் 2020): தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் திங்கள்கிழமை மட்டும் 44 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அதி வேகத்தில் பரவி வருகிறது. இன்று புதிதாக 1,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில், 1,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 46,504 – ஆகவும், சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 33,244 – ஆகவும் உயர்ந்துள்ளது….

மேலும்...

சென்னை உட்பட நான்கு மாவட்டங்களுக்கு வரும் 19 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு!

சென்னை (15 ஜூன் 2020): சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வரும் 19-ம் தேதி முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலாகிறது. ஜூன் 19 முதல் 30 வரை 12 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும்...