இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை..!

புதுடெல்லி (24 மே 2020): இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,31,868 ஆக அதிகரித்துள்ளது. 3,867 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் ஒரே நாளில் மட்டும், இந்தியாவில் ஒரே நாளில் அதிகபட்ச பாதிப்பாக 6,757 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,31,868 ஆக அதிகரித்துள்ளது. 3,867 பேர் பலியாகி உள்ளனர். 54,441 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத…

மேலும்...

முஸ்லிம்களின் தொழுகைக்காக திறக்கப்பட்ட தேவாலயம் – கொரோனாவால் நிகழ்ந்த அதிசயம்

பெர்லின் (24 மே 2020): ஜெர்மனியில் சமூக விலகலுடன் தொழுகை நடத்த அரசு அனுமதித்துள்ள நிலையில் கிறிஸ்தவ தேவாலயத்திலும் முஸ்லிம்கள் தொழுகை நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸால் பெரும்பாலான நாடுகளில் தேவாலயங்கள், மசூதிகள், கோவில்கள் என அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஜெர்மனியில் சமூக விலகல் விதிமுறைகளின்படி தேவாலயங்கள், மசூதிகளை திறந்து வழிபாடு நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது இப்படியிருக்க ஜெர்மனியின் பெர்லின் நியோகோலின் மாவட்டத்தில் உள்ள தார் அல்…

மேலும்...

சென்னையை தவிர சலூன் கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவு!

சென்னை (23 மே 2020): சென்னை பெருநகரம் தவிர, தமிழகம் முழுவதும் நா‌ளை முதல் சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில், முடி திருத்தும் மற்றும் அழகு நிலையங்கள், நா‌ளை முதல் கா‌லை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதிக்கப் படுவதாகவும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள முடி திருத்தும்…

மேலும்...

கேரளாவில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஊரடங்கு தளர்வு!

திருவனந்தபுரம் (23 மே 2020): ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் ஊரடங்கு தளர்த்தப் படுகிறது. கொரோனா பரவலைத் தடுக்க கேரளாவில் மற்ற நாட்களில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்க ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கேரளாவில் ரம்ஜான் பண்டிகை அறிவிக்கப் பட்டுள்ளதால், அத்தியாவசியப் பொருட்கள் வாங்கும் வகையில் சனிக்கிழமை இரவு 9 மணி வரை ஊரடங்கு தளர்த்தப் படுகிறது. அதேபோல ரம்ஜான் பண்டிகை தினமான ஞாயிற்றுக் கிழமை மட்டும்…

மேலும்...

வாகனம் கிடைக்காமல் அரசு பேருந்தை கடத்தி பயணம் சென்ற இளைஞர் கைது!

விஜயவாடா (23 மே 2020): ஊரடங்கு அமலில் உள்ளதால் ஊருக்கு செல்ல வாகனம் கிடைக்காமல் அரசு பேருந்தை கடத்தி அதில் பயணம் செய்த இளைஞரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடகாவிலிருந்து ஆந்திர மாநிலம் அனந்தப்புரத்திற்கு உறவினர் வீட்டிற்கு வந்தத இளைஞர் ஊரடங்கு காரணமாக ஊருக்கு திரும்ப செல்ல முடியாமல் இருந்துள்ளார். அதனால் அனந்தபுரத்தில் இருந்து தர்மவரம் வரை நடந்து வந்த அவர் அதன் பின்னர் பனிமலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை எடுத்து அதில் பெங்களூரு செல்ல…

மேலும்...

வழிபாட்டுத்தலங்களை உடனடியாக திறக்க வேண்டும் – ஆளுநர்களுக்கு அமெரிக்க அதிபர் உத்தரவு!

வாஷிங்டன் (23 மே 2020): அமெரிக்காவில் உள்ள அனைத்து வழிபாட்டுத்தலங்களையும் உடனடியாக திறக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆளுநர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்கா. இதன்  பரவலை தடுக்கும் விதமாக அமெரிக்காவில் அனைத்து வழிபாட்டுத்தலங்களும் மூடப்பட்டன. அதேவேளை அத்தியாவசிய பொருட்கள், மருந்து பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ட்ரம்ப், “அமெரிக்காவில் தேவாலயங்கள், ஜெப ஆலயங்கள் மற்றும் மசூதிகளை உடனடியாக…

மேலும்...

புத்தாடை இல்லா ரம்ஜான் பண்டிகை – முஸ்லிம்கள் முடிவு!

ஐதராபாத் (22 மே 2020): தெலுங்கானா மாநிலத்தில் முஸ்லிம்கள் புத்தாடை அணியாமல் இவ்வருட ரம்ஜான் பண்டிகையை கொண்டாட முடிவு செய்துள்ளனர். ரம்ஜான் நோன்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலக அளவிலான கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகமெங்கும் ரம்ஜான் பண்டிகை களையிழந்து காணப்படுகிறது. இது இப்படியிருக்க இந்தியாவில் குறிப்பாக முஸ்லிம்கள் அதிகம் வசிக்கு ம் தெலுங்கானா மாநிலத்தில் இவ்வருடம் புத்தாடை அணியாமல் வீட்டிலேயே தொழுகை நடத்தி ரம்ஜான் பண்டிகையை கொண்டாட முஸ்லிம்கள் முடிவு செய்துள்ளனர். எனினும்…

மேலும்...

மருத்துவர்களின் அறிவுரையை மீறும் டொனால்ட் ட்ரம்ப்!

வாஷிங்டன் (22 மே 2020): கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு மருத்துவர்கள் வழங்கும் அறிவுரைகளை தொடர்ந்து அவர் மறுத்து வருகிறார். இந்த ஆண்டின் இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதால் அதற்கான பிரச்சாரங்களில் பங்கேற்று வரும் ட்ரம்ப், தொடக்கத்திலிருந்தே கை குலுக்குவது போன்ற செயல்களில் மருத்துவர்களின் அறிவுரைகளை மீறி செயல்பட்டுவருகிறார். இந்நிலையில், மிச்சிகனில் செயல்படும் ஃபோர்ட் நிறுவனத்தில் முகக்கசம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் உற்பதிசெய்யப்படும் தொழிற்சாலைகளைப் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், முகக்கசம்…

மேலும்...

கொஞ்சம் நிறுத்தி வைங்க – பிரதமருக்கு எடப்பாடி கடிதம்!

சென்னை (22 மே 2020): விமான சேவையை இப்போதைக்கு தொடங்க வேண்டாம் என்று பிரதமருக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்தநிலையில், வருகிற 25-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கும் என்று அந்த துறையின் மந்திரி ஹர்தீப் சிங் பூரி நேற்றுமுன்தினம் அறிவித்தார். இதன்படி, வரும் 25 ஆம் தேதி முதல் நாடு…

மேலும்...

நெஞ்சை பிழியும் சம்பவம்: பசி பட்டினி – புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குழந்தைகளுடன் தற்கொலை!

ஐதராபாத் (22 மே 2020): தெலுங்கானா மாநிலத்தில் 9 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் , நாடெங்கிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசு மேற்கொண்ட முன்னறிவிப்பில்லாத ஊரடங்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பெரிய அளவில் பாதித்தது. இவர்களில் தினக்கூலிகள் கையில் உணவு,பணம் எதுவும் இல்லாமல் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் வரங்கல் புறநகர் கிணற்றில் மொத்தம் 9 புலம்பெயர் தொழிலாளர்களின் சடலங்களை போலீசார் மீட்டுள்ளனர். இவர்களின் உடம்பில்…

மேலும்...