வாஷிங்டன் (22 மே 2020): கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு மருத்துவர்கள் வழங்கும் அறிவுரைகளை தொடர்ந்து அவர் மறுத்து வருகிறார்.
இந்த ஆண்டின் இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதால் அதற்கான பிரச்சாரங்களில் பங்கேற்று வரும் ட்ரம்ப், தொடக்கத்திலிருந்தே கை குலுக்குவது போன்ற செயல்களில் மருத்துவர்களின் அறிவுரைகளை மீறி செயல்பட்டுவருகிறார்.
இந்நிலையில், மிச்சிகனில் செயல்படும் ஃபோர்ட் நிறுவனத்தில் முகக்கசம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் உற்பதிசெய்யப்படும் தொழிற்சாலைகளைப் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், முகக்கசம் அணிய மறுத்துவிட்டார்.
உலகிலேயா அதிக அளவில் கொரோனா வைரஸ் பாதித்துள்ள நாடு அமெரிக்காவே என்பது குறிப்பிடத்தக்கது.