டெல்லி ஜே.என்.யூ பல்கலைக் கழக தாக்குதல் விவகாரத்தில் திடீர் திருப்பம்!

புதுடெல்லி (07 ஜன 2020): டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் மீதான தாக்குதல் விவகாரத்தின் திடீர் திருப்பமாக இந்த தாக்குதலுக்கு இந்து ரக்ஷா தள் பொறுப்பேற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (05-01-2020) மாலை ஜே.என்.யூ பல்கலைக்கழத்தின் மாணவ, மாணவிகள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த நூற்றுக்கு மேற்பட்ட முகமூடி அணிந்த கும்பல், அங்கிருந்த ஜேஎன்யு மாணவர் சங்கத்தலைவர் அய்ஷி கோஷ், கல்லூரி மாணவர்கள், மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவ…

மேலும்...

என்னடா கொடுமை இது – தாக்கியவர்களை விட்டுவிட்டு அடி வாங்கியவர்கள் மீது வழக்கு!

புதுடெல்லி (07 ஜன 2020): டெல்லி ஜே.என்.யூ மாணவசங்க தலைவி உள்பட 19 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (05-01-2020) மாலை ஜே.என்.யூ பல்கலைக்கழத்தின் மாணவ, மாணவிகள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த நூற்றுக்கு மேற்பட்ட முகமூடி அணிந்த கும்பல், அங்கிருந்த ஜேஎன்யு மாணவர் சங்கத்தலைவர் அய்ஷி கோஷ், கல்லூரி மாணவர்கள், மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவ பிரிவான ABVB துணையுடன் இந்த பயங்கரம் நடத்தப்பட்டு…

மேலும்...

டெல்லியைப் போல் மும்பையில் நடந்தால் நடப்பதே வேறு – உத்தவ் தாக்கரே!

மும்பை (07 ஜன 2020): டெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள் மீதான தாக்குதல் மாணவர்கள் மீதான பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவா்கள் பேரணியின்போது முகமூடி அணிந்த மா்ம நபா்கள் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து, மாணவா்களைத் தாக்கியது தொடா்பாக முதல்வா் உத்தவ் தாக்கரேவிடம் மும்பையில் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு அவா் பதிலளித்ததாவது: ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்தப்பட்ட தாக்குதல், மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட…

மேலும்...

மருத்துவர்கள், செவிலியர்களையும் விட்டு வைக்காத ஏபிவிபி குண்டர்கள்!

புதுடெல்லி (06 ஜன 2020): டெல்லி ஜெ.என்.யுவில் தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீதும் ஏபிவிபி குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று முகத்தில் துணியை கட்டிக் கொண்டு வந்து ஏபிவிபி குண்டர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் மாணவர் பேரவை தலைவர் ஆயிஷ் கோஷ் பலத்த காயம் அடைந்தார். மேலும் காயம் அடைந்த 20 பேர் டெல்லி எய்ம்ஸ்…

மேலும்...

டெல்லி பல்கலைக்கழக தாக்குதல் – 20 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

புதுடெல்லி (06 ஜன 2020): டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தக்குதலில் காயம் அடைந்த 20 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சபர்மதி விடுதிக்குள் ஆயுதங்களுடன் முகமூடி அணிந்த சிலர் உள்ளே நுழைந்து விடுதியை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அயிஷ் கோஷ் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். அவர் தலை உடைந்து ரத்தம் கொட்டியது. முன்னதாக நேற்று முன்தினம் ஏ.பி.வி.பியைச் சேர்ந்த…

மேலும்...

டெல்லியில் பரபரப்பு – ஜே என் யூ மாணவர் சங்கத் தலைவர் மீது கொலை வெறி தாக்குதல்!

புதுடெல்லி (05 ஜன 2020): டெல்லி ஜவஹர்லால் நேரு (JNU) பல்கலைக்கழகம் மாணவர்கள் சங்க தலைவர் அய்ஷி கோஷ் மீது கொடூர தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. முகமூடி அணிந்து வந்த நபர்கள் மூர்க்கத்தனமாக தாக்கியதாக அய்ஷி கோஷ் புகார் தெரிவித்துள்ளார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சபர்மதி விடுதிக்குள் ஆயுதங்களுடன் முகமூடி அணிந்த சிலர் உள்ளே நுழைந்து விடுதியை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அயிஷ் கோஷ் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்….

மேலும்...