ஹிஜாப் அணிந்து கல்லூரி சென்ற மாணவி மீது ஏபிவிபி உறுப்பினர்கள் துன்புறுத்தல்!

மங்களூரு (05 மார்ச் 2022): கர்நாடகா மாநிலம் மங்களூரு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கல்லூரிக்கு தேர்வு எழுதச் சென்ற மாணவி ஹிஜாப் அணிந்ததற்காக அகில் பாரதிய விஸ்வ பரிஷத் (ஏபிவிபி) உறுப்பினர்களால் துன்புறுத்தப்பட்டுள்ளார். பி. சதீஷா பாய் அரசு முதல் தர கல்லூரி மாணவி ஹிபா ஷேக், அகில் பாரதிய விஸ்வ பரிஷத் (ஏபிவிபி) உறுப்பினர்கள் தன்னை துன்புறுத்தியதாக பந்தர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: “நான்  கல்லூரியில் தேர்வு…

மேலும்...

உத்திர பிரதேசத்தில் பாஜக வெற்றி பெறுவது கடினம் – அதிர்ச்சியில் பாஜக!

லக்னோ (27 பிப் 2022): உத்தரப்பிரதேச சட்டசபைக்கு நடைபெறும் தேர்தலில் வெற்றி பெறுவது எளிதல்ல என பா.ஜ.க வின் உள்கட்சி கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. இதுகுறித்து பாஜக வட்டாரங்களை மேற்கோள் காட்டி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் சமாஜ்வாதி – ராஷ்டிரிய லோக்தளம் கூட்டணி, லக்கிம்பூர் கெரியில் நடக்கும் வன்முறைகள், தேர்தலில் பாஜகவை பலவீனப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உ.பியில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைப்போம் என பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர்….

மேலும்...

அண்ணாமலைக்கு எந்த தகுதியும் கிடையாது – கே.எஸ்.அழகிரி அறிக்கை

சென்னை (23 பிப் 2022): தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது என்று அண்ணாமலை கூறுவதற்கு எந்தத் தகுதியும் கிடையாது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறது. கடந்த மக்களவை, சட்டமன்றம், ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் எத்தகைய பெருவெற்றியைத் தமிழக மக்கள் வழங்கினார்களோ, அதைவிடக் கூடுதலாக…

மேலும்...

ஒரே நகராட்சியில் 22 வார்டுகளில் டெபாசிட் இழந்த பாஜக!

புதுக்கோட்டை (23 பிப் 2022): நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் 22 வார்டுகளில் பாஜக டெபாசிட் இழந்துள்ளது. புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில் 23 வார்டுகளில் பா.ஜ.க தனித்து போட்டியிட்டது. இதில் 18வது வார்டு வேட்பாளர் மல்லிகா மட்டும் 428 வாக்குகள் பெற்றுள்ளார். இந்த வார்டில் அ.தி.மு.க வேட்பாளர் பாரதி வெற்றி பெற்றுள்ளார். புதுக்கோட்டை நகராட்சியில், 18வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மல்லிகா மட்டுமே வைப்புத் தொகையை தக்க வைத்துள்ளார். மற்ற 22 பா.ஜ.க வேட்பாளர்களும்…

மேலும்...

ஹிஜாப் பிரச்சினையை கிளப்பிய வார்டில் பாஜக டெபாசிட் இழப்பு!

மதுரை (22 பிப் 2022): மதுரை மேலூரில் வாக்குப்பதிவு நடைபெற்ற தினத்தில் பாஜக பூத் ஏஜெண்ட் ஹிஜாபை கழற்றச் சொன்ன வார்டில் திமுக வெற்றி பெற்றுள்ளது. பாஜக அங்கு டெபாசிட் இழந்தது. மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் அமைக்கப்பட்ட 44 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் மேலூரில் உள்ள சுந்தரேஸ்வர வித்யாலயா பள்ளியில் எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில், மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சியின் 8வது வார்டில் திமுக வேட்பாளரான முகமது யாசின் (சேர்மன் வேட்பாளர்)…

மேலும்...

ஒத்த ஓட்டு – மீண்டும் பாஜக சாதனை!

ஈரோடு (22 பிப் 2022): நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களிலும் திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேரூராட்சி 11 வது வார்டில் பாஜக வேட்பாளர் நரேந்திரன் ஒரே ஒரு வாக்கு மட்டும் பெற்றுள்ளார். ஏற்கனவே ஊரக உள்ளாட்சித்…

மேலும்...

ஹிஜாபை அகற்றச்சொன்ன பாஜகவை சேர்ந்தவர் சிறையிலடைப்பு!

ஹிஜாபை அகற்றச்சொன்ன பாஜகவை சேர்ந்தவர் சிறையிலடைப்பு! மதுரை (20 பிப் 2022): மதுரை மேலூரில் முஸ்லீம் பெண்ணின் ஹிஜாபை அகற்றச் சொன்ன பாஜகவை சேர்ந்தவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது, மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சியின் 8 ஆவது வார்டில் உள்ள அல்அமீன் பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்காளர்களிடம் ஹிஜாப்பை அகற்றுமாறு பா.ஜ.க. முகவர் கிரிநந்தன் வலியுறுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பா.ஜ.க. முகவர் கிரிநந்தன் கூறியதற்கு தேர்தல்…

மேலும்...

மதுரை அருகே முஸ்லீம் வாக்காளர்களின் ஹிஜாபை அகற்றக் கூறிய பாஜக பூத் ஏஜெண்ட்!

மதுரை (19 பிப் 2022): மதுரை மாவட்டம் மேலூரில் பாஜக பூத் ஏஜெண்ட் முஸ்லீம் பெண் வாக்காளர்களின் ஹிஜாபை அகற்றக் கூறியதால் அங்கு பரபரப்பு நிலவியது. மேலூர் நகராட்சி 8-வது வார்டு அல்அமீன் பள்ளி வாக்குச்சாவடியில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. அப்போது வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்கள் அணிந்திருந்த ஹிஜாபை அகற்ற சொல்லி பாஜக பூத் ஏஜெண்ட் கிரிராஜன் என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு வாக்குப்பதிவு சிறிது…

மேலும்...

தமிழகத்தில் ஹிஜாபுக்கு தடை – பாஜக அண்ணாமலை!

குன்னூர் (15 பிப் 2022): தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பள்ளி கல்லூரிகளில் ஹிஜாபுக்கு தடை விதிக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிலுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் குன்னூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது: “தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்படும். பொதுவெளியில் வேண்டுமானால் ஹிஜாப் அணியலாம். ஆனால் பள்ளி கல்லூரிகளில்…

மேலும்...

ஹிஜாபுக்கு ஆதரவான மனுதாரர்களின் தனிப்பட்ட விவரங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ள பாஜக!

பெங்களூரு (15 பிப் 2022): ஹிஜாபுக்கு ஆதரவாக வழக்கு தொடர்ந்துள்ள மாணவிகளின் தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் வெளியிட்டு அசிங்கமான செயலை செய்துள்ளது கர்நாடக பாஜக. ஹிஜாப் தொடர்பான வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது, இதில் ஹிஜாபை அனுமதிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்த மாணவர்களில் ஐந்து பேரின் முகவரிகள் அடங்கிய தனிப்பட்ட விவரங்களை பாரதிய ஜனதா கட்சியின் கர்நாடக பிரிவு இணையத்தில் வெளியிட்டுள்ளது. மாணவர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் வீட்டு முகவரிகள் கர்நாடக பாஜக ட்விட்டர் பக்கத்தில்…

மேலும்...