மருத்துவமனைகளில் கொரோனா படுக்கை இருப்பு குறித்து அறிந்துகொள்ளும் அரசு இணையதளம்!

சென்னை (18 மே 2021): இந்தியாவில் கொரோனா பரவல் உச்சத்தை அடைந்து வரும் நிலையில் தமிழகத்திலும் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு எந்தெந்த மருத்துவமனைகளில் படுக்கை இருக்கைகள் உள்ளன ? என்பதை அறிந்து கொள்ளவும், படுக்கைகளை அந்தந்த பகுதிகளில் முன்பதிவு செய்து கொள்ளவும் வசதிக்காக இணையதளம் ஒன்றை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் முகவரி  http://ucc.uhcitp.in/ இதில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளை பூர்த்தி செய்து படுக்கைகளை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

மேலும்...

கொரோனா தடுப்பூசி தமிழகத்திலேயே தயாரிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

சென்னை (18 மே 2021): தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிற நிலையில் அதனை கட்டுப்படுத்தும் முயற்சியிலும் தமிழக அரசு முழு மூச்சாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஆக்சிஜன், தடுப்பூசி மருந்து உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க தமிழகத்தில் தடுப்பூசி மருந்து உற்பத்தி நிலையங்களை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவ உயர் தொழில்நுட்ப சாதனங்கள், ஆக்சிஜன்…

மேலும்...

நெதர்லாந்திலிருந்து தமிழகத்திற்கு வந்தது ஆக்சிஜன்!

சென்னை (17 மே 2021): இந்தியாவில் உள்ள மருந்து நிறுவனங்களில் இருந்து தடுப்பூசி கிடைப்பது தாமதம் ஆகும் என்பதால் முன்கூட்டியே தமிழக மக்களுக்கு போடுவதற்காக உலக மருந்து நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார். அதன்படி 5 கோடி டோஸ் மருந்துகளை வாங்க உலகளாவிய டெண்டர் விட மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி மருந்துகளை வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. ஜூன் 5-ந்தேதி டெண்டர் திறக்கப்பட்டு உரிய நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசி மருந்து கொள்முதல் செய்யப்படும்….

மேலும்...

கொத்து கொத்தாக எரியும் சடலங்கள் – வைரலாகும் பரபரப்பு வீடியோ!

காசிப்பூர் (16 மே 2021): உத்தரப்பிரதேசத்தில் ஒரு மயானத்தில் கொரோனா பாதித்து இறந்தோரின் உடல்கள்கொத்து கொத்தாக எரிக்கப்படும் வீடியோ வைரலாகி வருகிறது இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. தினந்தோறும் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை, ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லை. இதனால் மருத்துவமனை வாயிலிலேயே நோயாளிகள் இறக்கும் நிலை வடமாநிலங்களில் ஏற்படுகிறது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கங்கை நதிக்கரையோரத்தில் சடலங்கள் மிதப்பதாக செய்திகள்…

மேலும்...

ரெம்டெசிவிர் மருந்தை அரசு தனி இணயதளத்தில் பதிவு செய்து இலகுவாக கிடைக்க உத்தரவு – தமிழக அரசு குட் மூவ்

சென்னை (16 மே 2021); இனி ரெம்டெசிவிர் மருந்துகளை தேவைப்படும் நோயாளிகளுக்கு இணையதளம் மூலம் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். ரெம்டெசிவிர் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு எடுத்துவரும் அடுத்த கட்ட நடவடிக்கையாக அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் கிடைக்க வழி வகை செய்துள்ளது. மேலும் வருகிற 18.05.2021 முதல் தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும், தமது மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்த விவரங்களை இணையதளத்தில் பதிவிட வேண்டும். மேலும் அவர்களில் யாருக்கெல்லாம்…

மேலும்...

அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து வழங்க தமிழக அரசு உத்தரவு!

சென்னை (16 மே 2021): தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:, “ முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று (16-5-2021), தமிழ்நாட்டிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கும் முறையை மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் உள்ள…

மேலும்...

உயிரிழக்கும் பொதுமக்களுக்கு யார் பொறுப்பு? – மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி!

சென்னை (15 மே 2021): கோவாக்சின் தடுப்பூசியை மற்ற மருந்து நிறுவனங்களும் தயாரிக்க னுமதிப்பதில் ஏன் தாமதம் என்று என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மற்ற மருந்து நிறுவனங்களுக்கும் கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்க அனுமதி வழங்கிடுங்கள் என காங்கிரஸ் காரியக் கமிட்டி ஆலோசனை கூறி 4 வாரங்களுக்குப் பின் மற்ற நிறுவனங்களுக்கு வழங்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் நீங்கள் செய்த தாமதத்தால் தவிர்க்கமுடியாத பாதிப்புக்குள்ளான மக்கள்,…

மேலும்...

கொரோனா விவகாரம் – சவூதியில் நடைமுறைக்கு வந்த புதிய விதிமுறைகள்!

ரியாத் (15 மே 2021): சவூதியில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் COVID-19 தடுப்பூசி போட வேண்டும் அல்லது வாராந்திர பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற முடிவை சவூதி அதிகாரிகள் செயல்படுத்தத் தொடங்கியுள்ளனர். நகராட்சி மற்றும் ஊரக விவகாரங்கள் மற்றும் வீட்டுவசதி அமைச்சகம் அறிமுகப்படுத்திய இந்த நடவடிக்கைகளின்படி, முடிதிருத்தும் கடைகள் மற்றும் பெண்களின் அழகு நிலையங்களில் பணிபுரிபவர்கள், உணவகங்கள், கஃபேக்கள், உணவு விற்பனை நிலையங்களில் உள்ள அனைவரும் கொரோன தடுப்பூசி செலுத்தியவர்களாக இருக்க வேண்டும் இல்லையேல்…

மேலும்...

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆலமரம் சாய்ந்தது – கடும் சோகத்தில் கட்சியினர்!

சென்னை(14 மே 2021): விசிக மாநில பொருளாளர் முகம்மது யூசுப் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர், முகமது யூசுப்புக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியானது விசிக மாநில பொருளாளர் முகம்மது யூசுப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவு தொல்.திருமாவளவன் உள்ளிட்ட விசிகவினரை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது. அரசியல் கட்சியினர் பலர் யூசுப் மறைவுக்கு கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும்...

சவூதியில் பணிபுரியும் அனைவரும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்!

ரியாத் (08 மே 2021): சவூதியில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியமாகும் என சவூதி மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் (HRSD) அறிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் ஒருபகுதியாகவும், அனைவருக்கும் ஆரோகியமான வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாகவும் சவூதியில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் தங்கள் பணியிடங்களுக்கு செல்வதெனில் கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொள்வது அவசியமாகும்.. இதனை நடைமுறைப்படுத்தும் நடைமுறை மற்றும் தேதியை அமைச்சகம் விரைவில் அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...