தமிழகம் முழுவதும் காவல்துறையினருக்கு இனி பால் கிடையாது – பால் முகவர்கள் அதிரடி அறிவிப்பு!

சென்னை (26 ஜூன் 2020): “தமிழகம் முழுவதும் காவல்துறையினர் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்யப் போவதில்லை”. என்று பால் முகவர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விநியோகத்தில் தமிழகம் முழுவதும் சுமார் 1.5லட்சம் பால் முகவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா பேரிடர் காலமான தற்போது மக்களுக்கு பால் தங்குதடையின்றி, தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும் என்கிற…

மேலும்...

ஜூன் 30 க்கு பிறகும் ஊரடங்கு நீடிக்க வாய்ப்பு!

சென்னை (26 ஜூன் 2020): தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஜூன் 30 க்குப் பிறகும் ஊரடங்கு தொடரலாம் என்ற கருத்து நிலவுகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 3645 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,622-ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 957-ஆக அதிகரித்துள்ளது. இந்த…

மேலும்...

சென்னையில் காட்டுத்தீயாய் பரவும் கொரோனா – ஒரே நாளில் 24 பேர் பலி!

சென்னை (26 ஜூன் 2020): சென்னையில் கொரோனா பரவல் தொடர்ந்து வரும் நிலையில் இன்று மட்டும் 24 பேர் பலியாகியுள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவில் அதி வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிர, டெல்லியை அடுத்து தமிழகத்தில் கொரோனா அதிக அளவில் பரவி வருகிறது. குறிப்பாக சென்னை மிகவும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 பேர் உயிரிழந்தனர். கே.எம்.சி. மருத்துவமனையில் 4 பேரும், ஆயிரம்…

மேலும்...

தடுமாறும் தமிழகம் – ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா தொற்று!

சென்னை (25 ஜூன் 2020): தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவி ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,56,183-லிருந்து 4,73,105-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,476-லிருந்து 14,894-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,58,685-லிருந்து 2,71,697-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 418 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 16,922 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது…

மேலும்...

கொரோனா மருந்து – தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு முதலில் விநியோகிக்க முடிவு!

புதுடெல்லி (25 ஜூன் 2020): நாடு முழுவதும் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கொடுக்கும் மருந்துக்கு இந்திய ஒழுங்குமுறை மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் (DCGI) ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் கோவிஃபோர்(Covifor) என்கிற பெயரில் இந்த மருந்து விற்பனைக்கு வருகின்றது. ஹைதராபாத்தைச் சேர்ந்த மருந்து தயாரிப்பாளரான ஹெட்டெரோ, கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தான Remdesivir-ஐ சந்தைப்படுத்த ஒப்புதலைப் பெற்றுள்ளது. இரண்டு மூன்று வாரங்களில் ஒரு லட்சம் குப்பியை உற்பத்தி செய்வதற்கான இலக்கை ஹெட்டெரோ நிர்ணயித்துள்ளது. நாட்டின்…

மேலும்...

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து!

புதுடெல்லி (25 ஜூன் 2020): சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் பாதியில் ஒத்திவைக்கப்பட்டன. மேலும் வருகிற ஜூலை 1ம் தேதி முதல் மீதமுள்ள தேர்வுகள் நடத்தப்படும் என கடந்த மாதம் 18ம் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்…

மேலும்...

கொரோனா பரவல் காரணமாக குறைவாக இயக்கப்படும் பேருந்துகள்!

நீலகிரி (25 ஜூன் 2020): கொரோனா பரவல் காரணமாக நீலகிரியில் , 30 சதவீதம் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. நீலகிரியில், பொது போக்குவரத்து ஜூன், 1ம் தேதி முதல் துவங்கியது. 50 சதவீத பஸ்கள், 60 சதவீத பயணிகளுடன் இயங்க அரசு அனுமதித்தது. அதன்படி, ஊட்டி, குன்னுார், கோத்தகிரி மற்றும் கூடலுார் கிளைகளில், 160 பேருந்துகள் இயக்கப்பட்டன. எனினும் மக்கள் மத்தியில் பேருந்தில் பயணிக்க அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, குறைவான பஸ்களை…

மேலும்...

திருச்சியில் பரபரப்பு – கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை வீசி எறிந்த மருத்துவ ஊழியர்கள்!

திருச்சியில் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதித்து உயிரிழந்தவரின் சடலத்தை வேனில் ஏற்றிசென்று கோட்டைமேடு காட்டுப்பகுதியில் வீசி விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் தற்போது கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், 433 பேர் பாதிக்கப்பட்டு, அதில் 206 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 228 பேருக்கு தொடர்ந்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் 78 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் திருச்சி சமயபுரத்தை…

மேலும்...

மாவட்டம் விட்டு வேறு மாவட்டங்கள் செல்ல இ.பாஸ் அவசியம் – முதல்வர் உத்தரவு!

சென்னை (25 ஜூன் 2020): தமிழகத்தில் இன்று முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- அ.தி.மு.க. அரசு, கொரோனா நோய்த் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு, ஊரடங்கு…

மேலும்...

கொரோனா பாதிப்பால் மேலும் ஒரு எம்.எல்.ஏ மரணம்!

கொல்கத்தா (24 ஜூன் 2020): கொரோனா பாதிப்பால் மேற்கு வங்க எம்.எல்.ஏ தாமோனாஷ் கோஷ் உயிரிழந்தார். 60 வயதான தாமோனாஷ் கோஷ் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏவாக இருந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு கடந்த மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். ஏற்கனவே இந்த மாத தொடக்கத்தில் தமிழகத்தில் திமுகவின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவரான எம்எல்ஏ ஜெ.அன்பழகன் ஒரு வாரத்திற்கு மேலாக கொரோனா…

மேலும்...