வந்தே பாரத் திட்டத்தின்கீழ் மேலும் 29 விமானங்கள்: மத்திய அரசு தகவல்!

புதுடெல்லி(24 ஜூன் 2020): வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர வந்தே பாரத் திட்டத்தின்கீழ் மேலும் 29 சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளி நாடுகளிலிருந்து இந்தியா வர இயலாமல் தவித்து வரும் இந்தியர்களை மீட்க வந்தே பாரத் திட்டத்தின்கீழ் மத்திய அரசு விமானங்களை இயக்கி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் விமானங்களை தமிழகத்தில் தரையிறக்க அனுமதிக்க கோரியும், வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை மீட்க கோரியும் தொடரப்பட்ட…

மேலும்...

பதாஞ்சலி நிறுவனம் தயாரித்த கொரோனா மருந்துக்கு தடை!

புதுடெல்லி (23 ஜூன் 2020): பாபா ராம்தேவின் பதாஞ்சலி நிறுவனம் தயாரித்த கொரோனா மருந்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் பல்வேறு மருந்துகள் ஆய்வின் அடிப்படையில் தற்காலிகமாக வழங்கப்பட்டு வருகின்றன. எனினும் ஒருபுறம் கொரோனாவுக்கு நிரந்தர மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வும் உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. இது இப்படியிருக்க யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை 7 நாட்களில் கண்டுபிடித்துவிட்டதாக தெரிவித்தது….

மேலும்...

வந்தேபாரத் திட்டத்தில் முறைகேடு – ஏர் இந்தியா மீது அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டு!

நியூயார்க் (23 ஜூன் 2020): வந்தேபாரத் திட்டத்தின்படி வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு வரும் ஏர்.இந்தியா விமானம் கட்டணங்கள் வசூலிப்பதை அமெரிக்க போக்குவரத்துதுறை எதிர்த்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டிலிருந்து இந்தியா வரமுடியாமல் சிக்கியுள்ள இந்தியர்களை வந்தேபாரத் திட்டத்தின் மூலம் ஏர் இந்தியா விமானம் மீட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா ஏர் இந்தியா விமானங்கள் இயக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமானங்களை இயக்குவதற்கு அமெரிக்கா கட்டுப்பாடுளை விதித்துள்ளது. அமெரிக்காவில் இருந்து விமானங்கள் இயக்குவதற்கு முன் அனுமதி…

மேலும்...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4.4 லட்சம் – உயிரிழப்பு 14,000 பேர்!

புதுடெல்லி (23 ஜூன் 2020): இந்தியாவில் இன்றுவரை கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 4,40,215 உயர்ந்துள்ளது. இதேபோல், மொத்த உயிரிழப்பு 14,011ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாட்டில் அதிக பாதிப்பு கொண்ட முதல் மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அதைத்தொடர்ந்து, டெல்லி, தமிழ்நாடு, குஜராத், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. இதுவரை 2,48,190 கொரோனா நோயாளிகள் குணமைடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைபவர்களின் விகிதமானது 56.37 சதவீதமாக அதிகரித்துள்ளது. உலகளவில்…

மேலும்...

மூன்று கிரிக்கெட் வீரர்கள் கொரோனாவால் பாதிப்பு!

இஸ்லாமாபாத் (23 ஜூன் 2020): பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மூன்று பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் விளையாட உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்னர் பாகிஸ்தான் வீரர்கள் ராவல்பிண்டியில் கொரோனா பரிசோதனை செய்துகொண்டர். பரிசோதனை முடிவில் அந்த அணியின் ஹைதர் அலி (பேட்ஸ்மேன்), ஹரிஸ் ரஃப் (பந்து வீச்சாளர்), ஷதிப் கான் (பந்து வீச்சாளர்) ஆகிய மூன்று வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது…

மேலும்...

முதல் நாள் மகன் மரணம், அடுத்த நாள் தந்தை மரணம் – போலீஸ் மீது மக்கள் குற்றச்சாட்டு!

தூத்துக்குடி (23 ஜூன் 2020): சாத்தான்குளத்தில் மகன் போலீஸ் கஸ்டடியில் மரணம் அடைந்துவிட அடுத்த நாள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தந்தையும் இறந்துள்ளதால் சாத்தான்குளம் பகுதி பெரும் பரபரப்பாய் காணப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். இவர் கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை…

மேலும்...

ஜூலை 7 முதல் விசிட் விசா மற்றும் சுற்றுலா விசாவில் அமீரகம் வர அனுமதி!

துபாய் (22 ஜூன் 2020): இதுவரை உலகம் கண்டிராத கொடிய கொரோனா வைரஸ் தொற்றுநோயின் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பலவிதமான பாதிப்புகளை சந்தித்துள்ளன. குறிப்பாக சுற்றுலாத்துறையும் அதனை சார்ந்த விமான போக்குவரத்து சேவை மற்றும் பயண சேவைகள் வழங்கக்கூடிய அனைத்து நிறுவனங்களும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. சில மாதங்களுக்கு பிறகு கொரோனாவின் தாக்கம் தற்போது குறைந்திருக்கும் தறுவாயில், ஒரு சில நாடுகள், தங்களின் நாடுகளில் அமல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகளையும், தடைகளையும் விலக்கிக்கொண்டு வருகின்றன. உலக அளவில் சுற்றுலா…

மேலும்...

பூரி ஜகந்நாதர் ஆலய ரதயாத்திரைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி!

புதுடெல்லி (22 ஜூன் 2020): ஒடிசா மாநிலம் பூரியில் ஜகந்நாதர் கோயில் ரதயாத்திரைக்கு நிபந்தனையுடன் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஒடிஷா மாநிலத்தின் கடற்கரை நகரான பூரியில் புகழ்பெற்ற ஜகந்நாதர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் புது தேர் செய்யப்பட்டு தேரோட்டம் நடப்பது பொது வழக்கம். இந்த ரத யாத்திரை கோவிலில் இருந்து கிளம்பி 2 KM தூரத்தில் உள்ள மவுசிமா என்னும் இவர்கள் அத்தை கோவில் வரை செல்லும். அங்கு 9 நாள் தங்கி இருந்து…

மேலும்...

மதுரையிலும் பொதுமுடக்கம் – தமிழக அரசு அறிவிப்பு!

மதுரை (22 ஜூன் 2020): மதுரையில் நாளை நள்ளிரவு முதல் ஜூன் 30 தேதி வரையில் முழு பொது முடக்கம் கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள், பரவை டவுண் பஞ்சாயத்து, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் ஜூன் 23 நள்ளிரவு முதல் ஜூன் 30 வரையில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. சுகாதாரத்துறை வல்லுனர்கள், மருத்துவ…

மேலும்...

கூடு விட்டு கூடு பாயும் கொரோனா – சென்னையிலிருந்து வெளியேறியவர்களால் விபரீதம்!

சென்னை (22 ஜூன் 2020): சென்னையை விட்டு பொதுமக்கள் அவரவர் ஊர்களுக்கு சென்றதால் தமிழகமெங்கும் கொரோனா அதிரடியாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பும், பலியானவர்கள் எண்ணிக்கையும் தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் தினம் தினம் புதுப்புது உச்சங்களை எட்டி வருகிறது. சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஜுன் 19ஆம் தேதி முதல் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதையடுத்து பல்லாயிரம் மக்கள் சென்னையை விட்டு புறப்பட்டு சொந்த ஊர் வர தொடங்கினர். இபாஸ் வாங்கியும் இ பாஸ் இல்லாமலும்…

மேலும்...