போக்குவரத்து காவலர் மரணம் – ஸ்டாலின் பரபரப்பு கருத்து!

சென்னை (09 ஏப்ரல் 2020): சென்னை மயிலாப்பூர் போக்குவரத்து காவலர் மாரடைப்பால் மரணம் அடைந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவிலும் அதிக அளவில் பரவி வருகிறது. இதனால் நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவலர்கள் 24 மணிநேர பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று சென்னை மயிலாப்பூர் பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து காவலர் அருண்காந்திக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடன் அவர் அருகில்…

மேலும்...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திடீர் பல்டி!

வாஷிங்டன் (09 ஏப் 2020): இந்தியாவுக்கு மிரடல் விடுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திடீரென பாராட்டு தெரிவித்துள்ளார். “மலேரியாவிற்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யவில்லை என்றால், இந்தியா கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்” என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்திருந்தது. இதனை அடுத்து ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை அதிக அளவில் உற்பத்தி செய்து வரும் இந்தியா, அமெரிக்காவுக்கு உதவும் வகையில் அந்த மருந்தின் ஏற்றுமதிக்கு கடந்த மாா்ச் 25-ஆம் தேதி விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டது….

மேலும்...

அத்தியாவசிய பொருட்கள் வாங்க மூன்று நாட்கள் மட்டுமே கெடு!

வேலூர் (08 ஏப் 2020): வேலூர் மாவட்டத்தில் மளிகை சாமான்கள் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வாங்க முடியும் என்று மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாகவும், பொதுமக்கள் நடமாட்டத்தைக் குறைக்கும் விதமாகவும், வியாழன் (09.04.2020) முதல் வேலூர் மாவட்டத்தில் மளிகை கடைகள், சூப்பர் மார்கெட், டிப்பார்மென்டல் ஸ்டோர்கள் ஆகிய வாரத்தின் திங்கள், வியாழன், ஞாயிற்று கிழமைகளில் மட்டும் காலை 06.00 மணி முதல் காலை 10.00 மணி வரை மட்டுமே இயங்கும்….

மேலும்...

பிரதமர் மோடியை சிக்க வைக்கும் முயற்சியா? – மோடியின் பரபரப்பு ட்வீட்!

புதுடெல்லி (08 ஏப் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகமே சோகத்தில் இருக்க, ‘பிரதமர் மோடியை கவுரவிக்க அனைவரும் 5 நிமிடங்கள் எழுந்து நில்லுங்கள்’ என்று இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ” எனக்காக அனைவரும் 5 நிமிடங்கள் எழுந்து நில்லுங்கள் என சமூக வலைதளங்களில் சிலர் பிரசாரம் செய்து வருவதாக எனக்குத் தகவல் கிடைத்தது. முதலில் பார்க்கும்போது என்னைத் தகராறில் சிக்க வைக்க பெயரை பயன்படுத்தி சதி…

மேலும்...

ஒத்தி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வை நடத்த தமிமுன் அன்சாரி புது ஐடியா!

சென்னை (08 ஏப் 2020): கொரோனா பரவலால் ஒத்தி வைக்கப்பட்ட 10 ஆம் வகுப்புத் தேர்வை நடத்த மஜக பொதுச் செயலாளரும் எம்.எல்.ஏவுமான தமிமுன் அன்சாரி யோசனை ஒன்றை வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா நோய்த்தொற்று காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கையை ஏற்கும் வகையில் பத்தாம் வகுப்புத் தேர்வை ஒத்திவைக்கும் முடிவை முதல்வர் அறிவித்தார். தற்போது கொரோனா தொற்று அச்சுறுத்தல் ஓயாத…

மேலும்...

கொரோனாவால் தந்தை மரணம் – மகன்கள் மீது வழக்கு!

சென்னை (08 ஏப் 2020): கொரோனா பாதிப்பால் இறந்ததாக கூறப்படும் கீழக்கரையைச் சேர்ந்தவரின் இரு மகன்கள் மீது கீழக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த 70 வயது முதியவர், துபாயிலிருந்து சென்னை திரும்பிய நிலையில் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி திடீரென சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். உடன் அவரது உடல் அவரது மகன்களிடம் ஒப்படைக்கப் பட்டது. உடலை பெற்றுக்கொண்ட அவர்கள் சொந்த ஊரான கீழக்கரைக்கு கொண்டுச் சென்று, அடக்கம்…

மேலும்...

வாவ் அஜீத் – ரூ 1.25 கோடி வழங்கி அசர வைத்து அதிரடி!

சென்னை (08 ஏப் 2020): கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் தடுப்பு பணிகளுக்காக பெரிய அளவில் நிதி தேவைப்படுவதால் பிரதமரும், பல மாநில அரசுகளும் பொதுமக்கள், பிரபலங்கள், நிறுவனங்கள் நிதியுதவி அளிக்க வேண்டுகோள் விடுத்தனர். அதே போல, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பொதுமக்கள் நிதியளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அளிக்கப்படும் நிதிக்கு 100% வரி விலக்கு உண்டு என்று அறிவித்தார். இதனைத்…

மேலும்...

கொரோனாவின் கோரமுகம் – வீதிகளில் வீசப்படும் உடல்கள்!

குவிட்டோ (08 ஏப் 2020): கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றான ஈகுவேடாரில் மரணிக்கும் உடல்கள் வீதிகளில் வீசப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஈகுவேடார் உலகின் ஏழை நாடுகளில் ஒன்று. இங்கு சுமார் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. 220 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவின் கோரமுகத்தால் வளர்ந்த நாடுகளே திணறிக் கொண்டு இருக்க, ஏழை நாடுகள் இதன் பாதிப்பால் தவித்துக் கொண்டு இருக்கின்றன. தென் அமெரிக்க நாடான ஈகுவேடாரில் பிப்ரவரி 15ம் தேதி கொரோனா…

மேலும்...

தாயாரின் இறுதிச் சடங்கிற்கு கூட செல்லாமல் கொரோனாவுக்காக சேவையாற்றிய ஆண் செவிலியர்!

ஜெய்ப்பூர் (08 ஏப் 2020): மரணமடைந்த தாயாரின் இறுதிச் சடங்கிற்கு கூட செல்லாமல் மருத்துவ சேவை ஆற்றியுள்ளார் ஆண் செவிலியர் ஒருவர். ஜெய்ப்பூா் எஸ்எம்எஸ் அரசு மருத்துவமனையிலுள்ள கொரோனா சிகிச்சைப் பிரிவில் ஆண் செவிலியராகப் பணிபுரிந்து வருபவா் ராமமூா்த்தி மீனா. அந்த மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வாா்டில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட இத்தாலி நாட்டைச் சோ்ந்தவா்கள் உள்பட 103 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். கடந்த 1 மாதத்துக்கும் மேலாக ராமமூா்த்தி தனது வீட்டுக்கு கூடச் செல்லாமல்…

மேலும்...

ஊடகங்களின் செய்தியை பார்த்து பதற்றம் அடைய வேண்டாம் – ஜவாஹிருல்லா கோரிக்கை!

சென்னை (08 ஏப் 2020): மரணித்த முஸ்லிமின் உடலை எரியூட்டப்படும் என்ற தவறான செய்தியை வெளியிட்ட கலெக்டரின் உத்தரவை பார்த்து முஸ்லிம்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்று மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், “கோவிட் 19 (கொரோனா வைரஸ்) பாதிப்பால் வேலூரில் 45 வயது மதிக்கத்தக்க முஸ்லிம் நபர் உயிரிழந்துள்ளார். அவரது உடலை எரியூட்டப்படும் என்று மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள தகவல் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதனை பார்த்து பலரும்…

மேலும்...