டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம்!

டோக்கியோ (04 ஆக 2021): டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் குத்துசண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். பெண்கள் குத்துசண்டை 69 கிலோ – இந்தியாவின் லவ்லினா போர்கோஹெய்ன் அரை யிறுதிக்கு தகுதி பெற்று இருந்தார். முதல்நிலை வீராங்கனையான துருக்கி நாட்டின் சுர்மெனெலியுடன் அரையிறுதிப் போட்டியில் லவ்லினா மோதினார். முதல் சுற்றில் தாக்குதல் ஆட்டத்தை தொடங்கிய சுர்மெலிக்கு 5 நடுவர்களும் 10 புள்ளிகள் அளித்தனர்.இரண்டாவது சுற்றிலும் அவரது செல்வாக்குத் தொடர்ந்தது. காலிறுதிப் போட்டியில், லவ்லினா 4-1 என்ற…

மேலும்...

கத்தார் வழியாக சவூதி செல்லும் இந்தியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்!

தோஹா (04 ஆக 2021): தற்போது சவூதி அரேபியாவிற்கு செல்வோர் நேரடியாக செல்லமுடியாத நிலை உள்ளது. எனவே சவூதி அரேபியா பயணத் தடை செய்யாத மூன்றாவது நாட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்த பின்னரே சவூதி செல்ல முடியும். இந்நிலையில் தற்போது இந்தியர்கள் சவூதி செல்ல வழித்தடமாக கத்தாரை தேர்ந்தெடுக்கின்றனர். அதேவேளை கத்தார் வழியாக வருபவர்கள் கத்தார் மற்றும் சவுதி அங்கிகரித்த இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும். மேலும் கத்தாரில் தங்குவதற்கு ஏஜெண்டுகள் நீண்ட கால…

மேலும்...

இந்தியாவிலிருந்து துபாய் செல்ல விமானங்களுக்கு டிக்கெட் புக்கிங் தொடக்கம்!

துபாய் (03 ஆக 2021): இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை ஐக்கிய அரபு அமீரகம் நீக்கியுள்ள நிலையில், விமான நிறுவனங்கள் ஆன்லைன் புக்கிங்கை தொடங்கியுள்ளன. கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக விமானப் பயணத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்திருந்தது. இத் தடையை நீக்கியுள்ள அமீரகம், இரண்டு முறை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை எடுத்துக் கொண்ட இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்புவதற்கான விசா வைத்திருப்பவர்கள் துபாய்க்கு திரும்பலாம் என அறிவிக்கப்…

மேலும்...

கத்தார் இந்தியா இடையே கோஃபார்ஸ்ட் புதிய பட்ஜெட் விமான சேவை!

தோஹா (02 ஆக் 2021): கத்தார் –  இந்தியா இடையே மற்றும் ஒரு விமான சேவையாக கோஃபர்ஸ்ட் ஏர்லைன்ஸ் விமான சேவை தொடங்கவுள்ளது. இந்தியாவின் பட்ஜெட் விமானமான நிறுவனமான கோ ஏர் ஏர்லைன்ஸ் அதன் பெயரை கோஃபர்ஸ்ட் ஏர்லைன்ஸ் என மாற்றியுள்ளது. இது கொச்சி தோஹா இடையே வாரம் இருமுறை (வியாழன் மற்றும் சனிக்கிழமை) தனது விமான சேவையை நடத்தும். அதேபோல கண்ணுர் தோஹா இடையே வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விமான சேவையை நடத்தும். மேலும் தோஹாவிலிருந்து…

மேலும்...

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம்!

டோக்கியோ (01 ஆக 2021): டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை பி.வி சிந்து. வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த இரண்டாவது பதக்கமாகும். டோக்கியோவில் தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில், மீராபாய் சானு வெள்ளி பதக்கத்தை வென்றிருந்த நிலையில், இந்திய வீராங்கனை பி.வி சிந்து. இன்றைய ஆட்டத்தில் சீன வீராங்கனை ஹி பிங்ஜியாவோவை வீழ்த்தியதன் மூலம் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற நிலையில் பி.வி.சிந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றதால்…

மேலும்...

இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கான பயணத்தடை ஆகஸ்ட் 7 வரை நீட்டிப்பு!

துபாய் (28 ஜுலை 2021): இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஆகஸ்ட் 7 வரை விமானங்களை இயக்கப்போவதில்லை என்று எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. பயணிகளின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, எமிரேட்ஸ் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கோவிட் பரவலைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 25 முதல் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் விடுமுறையில் இந்தியாவுக்குச் சென்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கு…

மேலும்...

22 மாவட்டங்களில் கொரோனா தொற்று திடீர் அதிகரிப்பு!

புதுடெல்லி (28 ஜூலை 2021): இந்தியாவில் 7 மாநிலங்களில் உள்ள 22 மாவட்டங்களில் கொரோனா தொற்று சற்று அதிகரித்து காணப்படுகிறது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களிடம் பேசும்போது, “நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 132 நாட்களுக்கு பிறகு 30 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது… அதேசமயம் 22 மாவட்டங்களில் மட்டும் கொரோனா தினசரி பாதிப்பு 100க்கும் கீழ் பதிவாகியுள்ளது.. இதில் 7 மாநிலங்களில் உள்ள 22 மாவட்டங்களில் கொரோனா தொற்று சற்று அதிகரித்து…

மேலும்...

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம்?

டோக்கியோ (26 ஜூலை 2021): டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், கடந்த 23 ஆம் தேதி கோலாகலமான துவக்க விழாவுடன் தொடங்கிய நிலையில், மகளிருக்கான 49 கிலோ எடைப்பிரிவு பளு தூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு, வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார். ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற முதல் இந்திய பளுதூக்கும் வீரர் என்ற பெரும் சாதனையை நிகழ்த்தினார். சீனாவைச் சேர்ந்த ஜிஹுய் ஹூ தங்கம் வென்றார்….

மேலும்...

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்!

டோக்கியோ (24 ஜூலை 2021): டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. பெண்கள் 49 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார் மீராபாய் சானு மூலம், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும். மீராபாய் சானு மணிப்பூரைச் சேர்ந்த வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

துபாய் – இந்தியா விமான சேவை தொடங்கப்படுமா? – எதிஹாத் ஏர்வேஸ் பதில்!

அபுதாபி (17 ஜூலை 2021): வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை இந்தியாவிலிருந்து விமான சேவை இல்லை என்று எதிஹாத் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. கோவிட் பரவழைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கான பயணத் தடை ஏப்ரல் 24 முதல் நடைமுறைக்கு வந்தது. பின்னர் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இந்தியாவில் கோவிட் குறைந்து வருவதால் ஜூலை 21 க்கு பிறகு விமான சேவை மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தடை நீடிக்கிறது….

மேலும்...