குஜராத்தில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் தொகுதிகளில் வெற்றியை அள்ளிய பாஜக!

Share this News:

அஹமதாபாத் (08 டிச 2022): குஜராத்தில் முஸ்லிம்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ள 19 சட்டமன்றத் தொகுதிகளில் 17 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

குஜராத் சட்டசபையில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் ஒரு முஸ்லீம் வேட்பாளரை கூட பாஜக நிறுத்தவில்லை என்ற உண்மை இருந்தபோதிலும் இது நடந்துள்ளது.

இதற்கிடையில், மீதமுள்ள 19 இடங்களில் ஜமால்பூர்-காடியா மற்றும் வத்காம் ஆகிய 2 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

அதேவேளை பாஜக வெற்றிபெற்ற பல தொகுதிகளில், பல முஸ்லிம் வேட்பாளர்கள் பாஜக அல்லாத கட்சிகளிலிருந்து போட்டியிட்டனர், அவர்களில் பலர் சுயேச்சைகளாகப் போட்டியிட்டனர்.

உதாரணமாக, லிம்பாயத் தொகுதியில் மொத்தம் 44 வேட்பாளர்கள் உள்ளனர், அவர்களில் 36 பேர் முஸ்லிம்கள். இங்கு பாஜகவின் சங்கீதாபென் ராஜேந்திர பாட்டீல் 52 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த இடத்தில் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) வெறும் 20 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

இம்முறை குஜராத் சட்டசபைக்கு காங்கிரஸின் இம்ரான் கெடவாலா என்ற ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.

அதிக முஸ்லீம் மக்கள்தொகை கொண்ட தொகுதிகளில் ஒன்று கோத்ரா ஆகும், அங்கு பாஜக வேட்பாளர் சந்திரசிங் ரவுல்ஜி வெற்றி பெற்றுள்ளார்.

அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) வேட்பாளர்கள் கணிசமான முஸ்லீம் மக்கள்தொகை கொண்ட 19 இடங்களில் 13 இடங்களில் போட்டியிட்டனர், ஆனால் இதில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை.


Share this News:

Leave a Reply