பிடிவாதத்தை கைவிடுகிறாரா சீமான்? – அதீத பரபரப்பில் நாம் தமிழர் தொண்டர்கள்!
திமுகவுடன் கடும் எதிர்ப்பை காட்டி வந்த சீமானின் சமீபத்திய நடவடிக்கைகள் பல்வேறு யூகங்களுக்கும், அனுமானங்களுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளன. முதல்வர் ஸ்டாலினை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துவிட்டு வந்ததில் இருந்தே பல்வேறு யூகங்களும், அனுமானங்களும் தமிழக அரசியலில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன. சீமானை பொறுத்தவரை திமுக என்றாலே அலர்ஜி.. ஸ்டாலின் என்றாலே ஆகாது. திமுக எதிர் கட்சியாக இருந்தபோதுகூட அதிமுகவை விட்டு, மேடைக்கு மேடை ஸ்டாலினை மட்டுமே சீமான் விமர்சித்து கொண்டே இருப்பார். ஆனால் ஸ்டாலின்…