சென்னை (08 பிப் 2020): நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானை மீண்டும் சீண்டியுள்ளார் நடிகை விஜயலட்சுமி.
விஜய் நடித்த ஃப்ரெண்ட்ஸ் படம் மூலம் அறிமுகம் ஆனவர் விஜயலட்சுமி, இவர் ஏற்கனவே சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார்.
இந்நிலையில் ஒரு காலத்தில் கடவுள் மறுப்பு கொள்கையாளராக இருந்து தற்போது சிவ பக்தராக மாறியுள்ள சீமானிடம் நடிகை விஜயலெட்சுமி எழுப்பி உள்ள கேள்விகள் எழுப்பியுள்ளார்.
சீமான் , தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு சென்று சிவலிங்கத்தை வழிபட்டு வந்தது தொடர்பாக, நடிகை விஜயலெட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டு கேள்வி எழுப்பி உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ,வாழ்த்துகள் படத்தின் படபிடிப்பில் கடவுள் மறுப்பு கொள்கையை கடைபிடித்த சீமான், திருநீரு பட்டை பூசியதர்காக தன்னையும், தனது தாயையும் கேலி பேசியதாக சுட்டிக்காட்டியுள்ள நடிகை விஜயலட்சுமி, தன்னை தெரியாது என்று சொல்வார். என்றும் தெரிவித்துள்ளார்.