இது தமிழ்நாடு உத்திர பிரதேசமல்ல – ஆளுநருக்கு கி.வீரமணி எச்சரிக்கை!

சென்னை (10 மார்ச் 2023): தமிழ்நாடு அரசுக்குத் தொல்லை தரவே ஓர் ஆளுநரா? வதந்திகளும், பொய்யுரைகளும் இங்கு எடுபடாது 2024 இல் ஒன்றிய அரசுக்குப் பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டார்கள்! தமிழ்நாடு இதற்கான திருப்பத்தை இந்திய அளவில் அளிக்கும்! என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; திராவிட தமிழ் மக்களின் பேராதரவினைப் பெற்று அமையப் பெற்ற தி.மு.க. ஆட்சி கடந்த 22 மாதங்களில் நிகழ்த்திய சாதனைகள் காரணமாக,…

மேலும்...

ஆன்லைன் சூதாட்டம் – ஜவாஹிருல்லா முக்கிய அறிக்கை!

சென்னை (10 மார்ச் 2023): ஆன்லைன் ரம்மிஉள்ளிட்ட கிடப்பில் உள்ள அனைத்து சட்ட முன்வடிவுகளுக்கும் ஒப்புதல் வழங்கக்கோரியும் வரும் 17ஆம் தேதி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆளுநர் மாளிகைமுன்பு சவப்பெட்டிகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆன்லைன் ரம்மி எனப்படும், இணையச் சூதாட்டத்தால் ஏற்படும் உயிர்ப் பலியைத்தடுக்க தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துருஅவர்களின்…

மேலும்...

தமிழ்நாட்டு ஆளுநர் மாற்றமா? – ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்!

சென்னை (18 ஜன2023): தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். தமிழ்நாடு மக்கள் மற்றும் அரசியல் சாசனத்திற்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக, திமுக அரசு ஆளுநர் மீது குற்றம் சாட்டி வருகிறது. கடந்த 12-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த திமுக குழு, 20 நிமிடங்கள் அவருடன் பேசியது. பின்னர், தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஸ்டாலின் சார்பில் புகார் மனு குடியரசுத் தலைவரிடம் கொடுக்கப்பட்டது. இதே போன்று, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும்…

மேலும்...

தமிழ்நாட்டு கவர்னருக்கு எதிரான கடிதம் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைப்பு!

சென்னை (15 ஜன 2023): தமிழக சட்டசபையில் கவர்னர் உரையின்போது நடந்த நிகழ்வுகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவான கடிதம் ஒன்றை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு எழுதி அனுப்பினார். அந்த கடிதத்தை ஜனாதிபதி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைத்தார். தமிழக சட்டசபையில், அரசு தயாரித்த உரையில் சில குறிப்பிட்ட பகுதிகளை பேசும்போது கவர்னர் ஆர்.என்.ரவி அதில் உள்ள பலதை வாசிக்கவில்லை. மேலும் சில கருத்துகளை அவர் சொந்தமாகவும் பேசினார். கவர்னரின் இந்த செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர்…

மேலும்...

ஆளுநர் சட்டமன்ற மரபுகளையே மீறிவிட்டார் – முதல்வர் ஸ்டாலின்!

சென்னை (09 ஜன 2023): ஆளுநருக்கு முழு மரியாதை அளிக்கும் வகையில் நடந்து கொண்டோம், எங்கள் கொள்கைக்கு மட்டுமல்ல, அரசின் கொள்கைகளுக்கே மாறாக கவர்னர் நடந்து கொண்டார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் கவர்னர் ஆர்.என். உரையின் மீதான தீர்மானத்தினை முன்மொழிந்து சட்டமன்றப் பேரவையில் ஆற்றிய உரையில் கூறியதாவது: கவர்னர் அவர்களுக்கு வரைவு உரையானது, தமிழ்நாடு அரசாங்கத்தால் ஏற்கெனவே அனுப்பப்பட்டு, அவரால் ஏற்பளிக்கப்பட்டு, அதன்பின்னர் அச்சடிக்கப்பட்டு இன்றைக்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் கணினியிலும், தேவைப்படும் உறுப்பினர்களுக்கு…

மேலும்...

ஆளுநர் ரவிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு!

சென்னை (29 நவ 2022): காஞ்சிபுரம் மாவட்டம் தஞ்சை பெரியார் திராவிட கழக செயலாளர் கண்ணதாசன் என்பவர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று சனாதன தர்மம் பற்றியும், திராவிட இயக்கக் கொள்கைகளுக்கு எதிராகவும் பேசி வருகிறார். தமிழக அரசு அனுப்பியுள்ள கோப்புகளுக்கு உரிய கையெழுத்து போடாமல், காலம் தாழ்த்துகிறா ஆரோவில் பவுண்டேஷன் சட்டத்தின் கீழ் தலைவர் பதவி என்பது சம்பளம்…

மேலும்...

தமிழக ஆளுநரை திரும்பப்பெறக் கோரி குடியரசுத் தலைவரிடம் மனு!

புதுடெல்லி (09 நவ 2022): தமிழக ஆளுநராக இருந்து வந்த பன்வாரிலால் புரோகித் மாற்றப்பட்டு, மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநராக மத்திய அரசு நியமித்தது. தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்ட உடனேயே திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில் ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழக ஆளுநரை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தும்…

மேலும்...

ஆளுநர் மீது கருப்புக்கொடி வீசியது உண்மையா? – முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

சென்னை (20 ஏப் 2022): ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கருப்புக் கொடிகள் வீசியதாக கூறப்படும் நிலையில் இதற்கு முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம் அளித்துள்ளார். மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க ஆளுநர் ஆர்.என் ரவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேற்றைய தினம் மயிலாடுதுறை சென்றிருந்தார். ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ், விசிக, திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது ஆளுநரின் கான்வாய்…

மேலும்...

ஆளுநர் திமுக மோதல் – ஆளுநர் திடீர் டெல்லி பயணம்!

சென்னை (07 ஏப் 2022): தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா, கூட்டுறவு சங்க சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட 7 மசோதாக்கள் ஆளுநர் ரவி முன் நிலுவையில் உள்ளன. இதை வலியுறுத்தி கடந்த 4-ம் தேதி மக்களவையில் `தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை நீக்க வேண்டும்’ என்று திமுக-வினர் கோரிக்கை வைத்திருந்தனர். அதைத்தொடர்ந்து தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை ஆளுநர் நிலுவையில் வைத்துள்ளார்…

மேலும்...