செங்கோட்டையனை ஐந்தாம் வகுப்பு தேர்வு எழுத வையுங்கள் – நாஞ்சில் சம்பத் பொளேர்!

Share this News:

சென்னை (26 ஜன 2020): கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஐந்தாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுவிடுவாரா? என்று நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு வைத்து மாணவர்களை மன உளைச்சளுக்கு உள்ளாக்கியுள்ளார்கள். செஙோட்டையனை இந்த தேர்வு எழுத வைக்க வேண்டும்.” என்றார்,.

மேலும் ரஜினி பெரியார் விவகாரம் குறித்து தெரிவிக்கையில்,” துக்ளக் மேடையில் ரஜினி சொந்தமாக பேசவில்லை. அவருக்கு கொடுத்த ஸ்க்ரிப்டைதான் பேசியுள்ளார். அவர் ஸ்க்ரிப்ட்டுக்கு நடிக்கக் கூடிய நடிகர்தானே.” என்றார்.

மேலும் ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்று எனக்கு தோன்றவில்லை அவ்வாறு ஆரம்பித்தால் தர்பார் போல தோல்விதான் என்றார்,.


Share this News:

Leave a Reply