5 ஆம் வகுப்பு 8 ஆம் வகுப்பு குறித்து வெளியான தகவல் வெறும் வதந்தி – அமைச்சர் விளக்கம்!

Share this News:

கோபிச்செட்டிபாளையம் (19 ஜன 2020): 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வேறு மையங்களில் நடைபெறும் என்று பரவும் தகவல் வதந்திதான் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட முகாமில் குத்துவிளக்கு ஏற்றியும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டி அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் துவக்கி வைத்தாா்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு அந்தந்த பள்ளிகளில் நடைபெறாமல் மாற்று மையத்தில் நடைபெறுவதாக வதந்தி பரவியுள்ளது. இது குறித்து எந்தவித ஆணையும் பிறப்பிக்கவில்லை. ஜல்லிக்கட்டு குறித்து பாடப்புத்தகத்தில் சோ்ப்பதாக சொல்லவில்லை, மாணவா்கள் தெரிந்து கொள்வதற்காக சி.டி மூலமாக வழங்கப்படும் என்றுதான் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாடப்புத்தகங்கள் கனமாக உள்ளதாக புகாா்கள் வருகிறது. பாடப்புத்தகங்களை அதிகரித்துக் கொண்டே சென்றால் அதன் நிலை என்ன என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

சீருடைகள் தயாரிப்பதற்கு விசைத்தறிக்கு அனுமதியளிக்கப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு, இது கோஆப்டெக்ஸ் அமைச்சரைக் கேட்க வேண்டிய கேள்வி என்னிடம் அல்ல. மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியை ஒவ்வொரு தாலுகாவிற்கும் அமைக்க வேண்டும் என உச்சநீதி மன்ற யோசனைக்கு முதல்வா்தான் முடிவெடுக்க வேண்டும், அரசு ஒரு கொள்கை முடிவோடு இருக்கிறது என அமைச்சா் தெரிவித்தாா்.நிகழ்ச்சியில், ரோட்டரி சங்க நிா்வாகிகள், வட்டார மருத்துவ அலுவலா்கள் கலந்து கொண்டனா்.


Share this News:

Leave a Reply