கலாஷேத்ரா பாலியல் புகாரில் கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் கைது!

சென்னை (03 ஏப் 2023): கலாஷேத்ரா பாலியல் புகாரில் கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டுள்ளார். திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவர் குமரி, கலாஷேத்ரா கல்லூரியில் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் கடந்த 2008-ம் ஆண்டு முதல்…

மேலும்...

ஹோலி கொண்டாட்டத்தில் ஜப்பானிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை VIDEO

புதுடெல்லி (11 மார்ச் 2023): ஹோலி கொண்டாட்டத்தின் போது, ​​ஜப்பானிய பெண்ணை இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி பஹர்கஞ்ச் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிறுமியை இளைஞர்கள் துஷ்பிரயோகம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. வீடியோவில், இளைஞர்கள் குழு ஒன்று சிறுமியை கீழே பிடித்து வலுக்கட்டாயமாக வர்ணம் பூசி அவள் முகத்தில் தெளித்து, அவள் தலையில் முட்டைகளை வீசுகிறது. இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்…

மேலும்...

சிறுமிக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் கைது!

ஜார்கண்ட் (14 டிச 2022): ஜார்கண்டின் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர், 8 வயது மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர் கடந்த சில நாட்களாக, சிறுமியை அருகிலுள்ள புதருக்கு அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக போலீஸ் அதிகாரி கூறினார். கடந்த வாரம் படாம்டா தொகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், குற்ற செயலில்…

மேலும்...

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டாக்டர் ரஜினிகாந்த் கைது!

கரூர் (17 நவ 2021): கரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் மருத்துவர் ரஜினிகாந்தை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் தாய், கரூா் அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் பாலியல் தொந்தரவு தொடர்பாக புகாரளித்திருந்தாா். இந்த புகாரின்பேரில், மருத்துவா் ரஜினிகாந்த் மற்றும் அவரது மேலாளா் சரவணன் ஆகியோா் மீது போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவா்களை தேடி வந்தனர். இந்நிலையில், மருத்துவர் ரஜினிகாந்தை போக்சோ சட்டத்தின் கீழ் தனிப்படை போலீசார்…

மேலும்...

தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபா அதிரடி கைது!

புதுடெல்லி (16 ஜூன் 2021): பாலியல் புகாரில் சிக்கி தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவ சங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இதுகுறித்த புகாரின் அடிப்படையில் கேளம்பாக்கம் போலீசார் சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது….

மேலும்...

ஆடைக்கு மேல் பெண்ணின் மார்பை தொடுவது குற்றமல்ல – மும்பை நீதிமன்ற தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் நிறுத்திவைப்பு!

புதுடெல்லி (27 ஜன 2020): ஆடைக்கு மேல் பெண்ணின் மார்பை தொடுவது பாலியல் குற்றமல்ல என்ற மும்பை உயர் நீதிமன்ற உத்தரவை டெல்லி உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு மகாராஷ்டிராவை சேர்ந்த 39 வயது   நபர். பக்கத்து வீட்டைச் சேர்ந்த 12 வயது சிறுமியை  மார்பகங்களை ஆடையோடு சேர்த்து அழுத்தி பாலியல் ரீதியாக அத்துமீறல் செய்துள்ளார். இது தொடர்பாக குற்றவாளிக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் வழக்கு நடைபெற்றது. குற்றவாளியை…

மேலும்...

ஆடைக்கு மேல் பெண்ணின் மார்பை தொடுவது பாலியல் குற்றமல்ல – நீதிமன்றம் பகீர் தீர்ப்பு!

மும்பை (25 ஜன 2021): ஆடைக்கு மேல் பெண்ணின் மார்பை தொடுவது பாலியல் குற்ற வழக்கில் சேராது என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு மகாராஷ்டிராவை சேர்ந்த 39 வயது   நபர். பக்கத்து வீட்டைச் சேர்ந்த 12 வயது சிறுமியை  மார்பகங்களை ஆடையோடு சேர்த்து அழுத்தி பாலியல் ரீதியாக அத்துமீறல் செய்துள்ளார். இது தொடர்பாக குற்றவாளிக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் வழக்கு நடைபெற்றது. குற்றவாளியை போஸ்கோ சட்டத்தின்கீழ் நடவடிக்கை…

மேலும்...

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை!

டாக்கா (13 அக் 2020): வங்க தேசத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் மிகவும் கொடூரமானவையாக இருக்கின்றன.இந்த சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு சரியான தண்டனை கொடுத்தால் மட்டுமே இதற்கு எல்லாம் முடிவு வரும் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில், தற்போது பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்குவதற்கு வங்காள தேச அரசு…

மேலும்...

இளம் பெண்களுடன் உல்லாசம் – நாகர்கோவில் காசி அளித்துள்ள திடுக்கிடும் வாக்குமூலம்!

நாகர்கோவில் (24 மே 2020): நாகர்கோவில் காசி போலீசாரிடம் மிகவும் கூலாக வாக்குமூலம் அளிப்பதாக கூறப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் உள்ள பெண்களை குறி வைத்து அவர்களிடம் பழகி பணம் பறித்த நாகர்கோவில் காசியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது 5 பெண்கள் புகார் அளித்திருந்த நிலையில் போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட காசியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. போலீசார் கேட்கும் கேள்விகளுக்கு காசி ரொம்பவே கூலாக பதிலளிப்பதாக கூறப்படுகிறது. அதேபோல பல திடுக்கிடும்…

மேலும்...

சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவில் அர்ச்சகர் கைது!

சென்னை (23 மே 2020): சென்னையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த கோவில் அர்ச்சகர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மடிப்பாக்கம் அடுத்த உள்ளகரம் மண்டபம் இணைப்பு சாலையில் உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வந்தவர் சிவக்குமார்(59). இவர் சென்னை அண்ணா சாலை எல்.ஐ.சி பின்புறம் உள்ள அன்புக்குறிய அம்மன் கோயிலில் அர்ச்சகராக உள்ளார். நேற்று முன்தினம் சிவகுமார் வீட்டின் பகுதியில் வசித்து வந்த 10 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து…

மேலும்...