நாகர்கோவில் (24 மே 2020): நாகர்கோவில் காசி போலீசாரிடம் மிகவும் கூலாக வாக்குமூலம் அளிப்பதாக கூறப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் உள்ள பெண்களை குறி வைத்து அவர்களிடம் பழகி பணம் பறித்த நாகர்கோவில் காசியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது 5 பெண்கள் புகார் அளித்திருந்த நிலையில் போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட காசியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
போலீசார் கேட்கும் கேள்விகளுக்கு காசி ரொம்பவே கூலாக பதிலளிப்பதாக கூறப்படுகிறது. அதேபோல பல திடுக்கிடும் தகவல்களையும் காசி அளிப்பதாகவும் கூறப்படுகிறது. அவை என்ன என்பதை போலீசார் இதுவரை வெளியிடவில்லை.