டாக்கா (13 அக் 2020): வங்க தேசத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் மிகவும் கொடூரமானவையாக இருக்கின்றன.இந்த சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு சரியான தண்டனை கொடுத்தால் மட்டுமே இதற்கு எல்லாம் முடிவு வரும் என்று பலரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்குவதற்கு வங்காள தேச அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.