குஜராத் மாடலை தமிழ்நாட்டில் பின்பற்ற திமுக எம்.எல்.ஏ பரிந்துரை!

Share this News:

சென்னை (16 ஜன 2023): “குஜராத் சட்டசபை போல தமிழக சட்டசபையில் தமிழ்நாட்டின் வரைபடத்தை வைக்கலாம்!” என மைலாப்பூர் திமுக எம்.எல்.ஏ வேலு வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “குஜராத் சட்டமன்றத்தின் முகப்பில் குஜராத் மாநிலத்தில் வரைபடம் பொறிக்கப் பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாடு சட்டமன்றத்திலும் தமிழ்நாட்டின் வரைபடத்தை வைக்கலாமே? குஜராத் மாடலை சில விஷயங்களில் பின்பற்றலாம். பாஜகவினர் தவறு என சொல்வார்களா என்ன?” என பதிவிட்டுள்ளார்.

“குஜராத் மாடல்” என்ற சொல்லை வைத்தே பிரதமர் நரேந்திர மோடியை பில்டப் செய்த பாஜகவை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

“குஜராத் மாடல்” என்பதே பொய்யாக கட்டமைக்கப்பட்ட பிம்பம் என பல்வேறு அரசியல் நோக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்த சூழலில் திமுக எம்.எல்.ஏவின் இந்த ட்விட்டர் பதிவு, பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.


Share this News:

Leave a Reply