விஜய் சேதுபதி மீதான தாக்குதலுக்கு காரணம் என்ன? – போலீசார் விளக்கம்!

பெங்களூரு (05 நவ 2021): பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை தாக்கிய வழக்கில் ஜான்சன் என்பவர் கைது செய்யப்பட்டார். செவ்வய்கிழமை அன்று பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை ஒருவர் திடீரென தாக்கினார். இந்த வீடியோ வைரலானது. இந்நிலையில் தாக்கிய ஜான்சன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். புகைப்படம் எடுப்பது தொடர்பாக விமானத்தில் ஏற்பட்ட வாக்குவாதமே இந்த தாக்குதலுக்கு பின்னணியில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். ஜான்சன் புகைப்படம் எடுக்க அனுமதி கேட்டார், ஆனால்…

மேலும்...

நடிகர் விஜய் சேதுபதியுடன் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் திடீர் சந்திப்பு!

சென்னை (25 டிச 2020): திரைப்பட நடிகர் விஜய் சேதுபதியை எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் சந்தித்துப் பேசியுள்ளனர். வியாழன் அன்று நடந்த இந்த சந்திப்பின்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கொரோனா காலத்தில் மேற்கொண்ட பணிகள் அடங்கிய சிறப்பு கையேட்டினை வழங்கினர். எஸ்.டி.பி.ஐ கட்சியின் ராயபுரம் தொகுதி தலைவர் கோல்ட் ரஃபி, தொகுதி செயலாளர் ஆரிஃபுல்லா, துணைத்தலைவர் பஷீர் உள்ளிட்ட நிர்வாகிகள் இச்சந்திப்பின்போது உடனிருந்தனர்.

மேலும்...

விஜய்சேதுபதி விவகாரத்தில் நச்சுக்கருத்து – அமீர் கண்டனம்!

சென்னை (21 அக் 2020): நடிகர் விஜய் சேதுபதி மக்களுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தத விவகாரத்தில் இயக்குனர் அமீர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இயக்குனர் அமீர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இந்த நாட்டில் ஒவ்வொரு தனி மனிதனும் தன்னுடைய கருத்தைப் பொது வெளியில் பகிர்ந்து கொள்ளக் கூடிய உரிமையை அரசியல் சாசனம், நம் அனைவருக்கும் வழங்கி உள்ளது. அது போல் ஒவ்வொருவரும் தாம் விரும்பிய (சட்டம் அனுமதித்த) தொழிலை செய்வதற்கும்…

மேலும்...

விஜய் சேதுபதிக்கு அவமானம் – திருமாவளவன் கருத்து!

சென்னை (19 அக் 2020) : 800 படத்திலிருந்து விஜய் சேதுபதி வெளியேயற்றப்பட்டுள்ளார் என்று தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், “விஜய் சேதுபதி தமிழினத்தின் கோரிக்கையைப் புறந்தள்ளினார். மு.முரளிதரன் விஜய்சேதுபதியைப் புறந்தள்ளினார். அவர் ‘800’ படத்தில் நடிப்பதிலிருந்து வெளியேறவில்லை; வெளியேற்றப்பட்டார். அவர்,மகிழ்ச்சியாய் அல்ல; விரக்தியாய் “நன்றிவணக்கம்” என்கிறார். இது அவருக்குநேர்ந்த அவமதிப்பு. என்று திருமா தெரிவித்துள்ளார்.

மேலும்...

முரளிதரன் வேண்டுகோள் எதிரொலி – முத்தையா முரளிதரன் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகல்?

சென்னை (19 அக் 2020): இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு தயாராகும் 800 திரைப்படத்திலிருந்து விஜய் சேதுபதி விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 800 என்ற பெயரில் தயாராகும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சிகள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்தவர்கள் பலரும் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிக்கக் கூடாது என கருத்து கூறி வந்தனர். டிவிட்டரிலும் ஷேம் ஆன்…

மேலும்...

தமிழனாக பிறந்தது குற்றமா? – முத்தையா முரளிதரன் பரபரப்பு அறிக்கை

சென்னை (16 அக் 2020): முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படமான ‘800’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என எதிர்ப்பு உருவாகியுள்ள நிலையில் முத்தையா முரளிதரன் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் கூறியிருப்பதாவது: ‘இதுநாள்‌ வரை என்‌ வாழ்க்கையில்‌ பல சர்ச்சைகளைக் கடந்தே வந்துள்ளேன்‌. அது விளையாட்டானாலும்‌ சரி தனிப்பட்ட வாழ்க்கையானாலும்‌ சரி. தற்போது எனது வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘800’ திரைப்படத்தைச்‌ சுற்றி பல்வேறு சர்ச்சைகள்‌, விவாதங்கள்‌ எழுந்துள்ள நிலையில்‌ அதற்கான…

மேலும்...

விஜய் சேதுபதிக்கு பாஜக ஆதரவு – முத்தையா முரளிதரன் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகலா?

சென்னை (16 அக் 2020): முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பதற்காக விஜய் சேதுபதிக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் இலங்கையைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார். இது “800” என்ற பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் நடிப்பதற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எழுத்தாளர் ஜெயபாலன், சீமான், பாரதிராஜா, தியாகு, கவிஞர்…

மேலும்...

கமல் விஜய்சேதுபதி இடையே காரசார வார்த்தைப் போர்!

சென்னை (03 மே 2020): கமலின் கருத்துக்கள் புரியவில்லை என்ற விஜய் சேதுபதியின் கேள்விக்கு நடிகர் கமல் காரசாரமாக பதிலளித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனின் பேச்சோ அல்லது சமூகவலைதளங்களில் அவர் பதிவிடும் கருத்துக்களோ பலருக்கும் புரியவில்லை என்ற குறை பல ஆண்டுகளாகவே சொல்லப்பட்டு வருகிறது. மே 1அன்று ஊரடங்கு தொடர்பாக அவர் பதிவிட்ட டுவீட் பலருக்கும் புரியவில்லை என்றனர். இதுதொடர்பாக ஏற்கனவே நடிகர் கமல் சில விளக்கங்கள் கொடுத்திருந்தார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் வாயிலாக நேரலையில் பேசினார் கமல். இவரை…

மேலும்...

போய் வேற வேலை இருந்தா பாருங்கடா – வெளுத்து வாங்கிய விஜய் சேதுபதி!

சென்னை (12 பிப் 2020): நடிகர் விஜய் சேதுபதி கிறிஸ்தவ மதம் மாறியதாக வதந்தி பரப்புபவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். நெய்வேலியில் நடிகர் விஜய் படப்பிடிப்பில் இருந்தபோது, வருமானவரித்துறையினர் பிகில் படத்தில் வாங்கிய சம்பளம் குறித்து நேரில் விசாரணை நடத்தினர். அதுமட்டுமின்றி, ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் அலுவலகங்கள், திரையரங்குகள், விஜய்க்கு சொந்தமான வீடுகள் மற்றும் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் வீடுகள் ஆகியவற்றில் சோதனை நடத்தினர். இந்த சம்பவம் சினிமாத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே விஜய் வீட்டில் நடத்தப்பட்ட…

மேலும்...