துபாய் – இந்தியா விமான சேவை தொடங்கப்படுமா? – எதிஹாத் ஏர்வேஸ் பதில்!

அபுதாபி (17 ஜூலை 2021): வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை இந்தியாவிலிருந்து விமான சேவை இல்லை என்று எதிஹாத் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. கோவிட் பரவழைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கான பயணத் தடை ஏப்ரல் 24 முதல் நடைமுறைக்கு வந்தது. பின்னர் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இந்தியாவில் கோவிட் குறைந்து வருவதால் ஜூலை 21 க்கு பிறகு விமான சேவை மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தடை நீடிக்கிறது….

மேலும்...

இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டவர்கள் சவூதியில் அப்டேட் செய்வது குறித்த விளக்கம்!

புதுடெல்லி (16 ஜூலை 2021): இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டவர்கள் சவூதி வரும்போது தவக்கல்னா அப்ளிகேஷனில் அப்டேட் செய்வது குறித்த சிறு விளக்கம். சவூதி அரேபியா அங்கீகரித்துள்ள கோவிட் 19 தடுப்பூசிகளில் கோவிஷீல்ட் (ஆஸ்டா ஜெனக்கா) தடுப்பூசியும் ஒன்று. இதனை போடுபவர்கள் முதல் டோசிற்கும், இரண்டாவது டோசிற்கும் இடையே 42 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்பதாக சவூதி சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் சிலர் இரண்டாவது டோசை 29 மற்றும் 31 நாட்களிலேயே பெற்றுள்ளனர். இவர்கள்…

மேலும்...

சவூதியில் கோவிட் (தவக்கல்னா) செயலியில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் கைது!

ரியாத் (16 ஜூலை 2021):கோவிட் குறித்து தனிநபர்களின் சுகாதார நிலையை தெளிவுபடுத்துவது குறித்த தவக்கல்னா செயலியில் முறைகேட்டில் ஈடுபட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டின 122 பேரை சவூதி போலீசார் கைது செய்துள்ளனர் சவூதியில் தனி நபர் குறித்த அனைத்து நடைமுறைகளும் தவக்கல்னா என்ற செயலியில் பதிவு செய்யப்பட்டிருக்கும். அதில் கோவிட் 19 குறித்த தகவல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கும். இநிலையில் இந்த செயலியில் பணம் பெற்றுக்கொண்டு தனி நபர் சுகாதார நிலையை மாற்றம் செய்து சிலர் முறைகேட்டில் ஈடுபட்டது…

மேலும்...

துபாயில் பக்ரீத் பண்டிகைக்குப் பிறகு கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு!

துபாய் (14 ஜூலை 2021): ஐக்கிய அரபு அமீரகத்தில் கோவிட் வழக்குகள் மற்றும் இறப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரக சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. கடந்த பண்டிகை விடுமுறை மற்றும் புத்தாண்டு விடுமுறை நாட்களின் புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த எச்சரிக்கை. ஐக்கிய அரபு அமீரக சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் டாக்டர்ஃபரீதா அல்-ஹுஸ்னி எச்சரித்துள்ளார். கடந்த பத்து நாட்களாக தினசரி கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை 1600 க்கு…

மேலும்...

சீன தடுப்பூசி பெற்றவர்களுக்கு சவுதியில் தனிமைபப்டுத்தல் அவசியம் இல்லை!

ரியாத் (13 ஜூலை 2021): சவுதிக்கு வரும் பயணிகள் சீன தடுப்பூசிகளைப் பெற்றிருந்தால் அவர்களுக்கு சவூதி அரேபியாவில் தனிமைப்படுத்தப்படல் அவசியம் இல்லை என சவூதி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே சவூதி அரேபியாவில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை பெற்றவர்களுக்கும், சீன தடுப்பூசிகளான, சினோஃபார்ம் மற்றும் சினோவாக் இரண்டு டோஸ் பெற்றவர்களுக்கும் சவுதியில் தனிமைப் படுத்தலில் விலக்கு அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில், இந்தியாவில் இருந்து கோவாசின் பெறுற்ற பயணிகள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகம் இந்தியா இடையே விமான போக்குவரத்து எப்போது தொடங்கப்படும்?

துபாய் (13 ஜூலை 2021): இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான பயணிகள் விமானத் தடை, எதிர்வரும் ஜூலை 21 வரை தொடரும் என்பது உறுதி படுத்தப் பட்டுள்ளது. ஜூலை 21 க்குப் பிறகு ஜூலை 22 முதல் நிபந்தனைகளுடன் விமான சேவையை மீண்டும் தொடங்கப் படலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால் இதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் அதிகாரிகள் தரப்பில் இருந்து இதுவரை கிடைக்க வில்லை இந்தியாவுடன் சேர்த்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும்…

மேலும்...

இந்தியாவில் கோவிட் மூன்றாவது அலை குறித்து இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை!

புதுடெல்லி (12 ஜூலை 2021); கோவிட் -19 நோய்த்தொற்றின் மூன்றாவது அலைக்கு வெகுஜனக் கூட்டங்கள் ‘சூப்பர் ஸ்ப்ரெடர்களாக’ மாற வாய்ப்புள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கோவிட்- நடைமுறையை குறைந்தபட்சம் இன்னும் மூன்று மாதங்களுக்கு கண்டிப்பாக அமல்படுத்துமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளை ஐ.எம்.ஏ வலியுறுத்தியுள்ளது. “சுற்றுலா , யாத்திரை பயணம், மத சடங்குகள் அனைத்தும் தேவையானதுதான் , ஆனால் அவற்றிற்கு இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும்…

மேலும்...

சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று கொரோனா உயிரிழப்பு எதுவும் இல்லை!

சென்னை (12 ஜூலை 2021): சென்னையில் நான்கரை மாதங்களுக்குப் பிறகு இன்று கொரோனா உயிரிழப்பு எதுவும் இல்லை. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 2 வது அலை தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இருப்பினும் கோவை, ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டும் தினசரி நோய் தொற்று ஏற்ற இறக்கங்களோடு இருந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த மே மாதம் தினசரி பாதிப்பு உச்சத்தை தொட்டு இருந்தது. மே 12-ந்தேதி அன்று அதிகபட்சமாக 7,564 பேருக்கு நோய்…

மேலும்...

அச்சுறுத்தும் ஜிகா வைரஸ் – மேலும் மூவர் பாதிப்பு!

திருவனந்தபுரம் (12 ஜூலை 2021): கேரளாவில் கோவிட் தொற்று பரவலும், ஜிகா வைரஸ் பரவலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால்,பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கேரளாவில் 22 மாத குழந்தை உட்பட மேலும் மூவருக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இத்துடன் மாநிலத்தில் மொத்தம் 18 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே கேரளாவில் கோவிட் தொற்று பரவலும், ஜிகா வைரஸ் பரவலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கேரளத்துக்கு உதவ மத்திய நிபுணர்…

மேலும்...

இந்தியாவுக்கு விமான போக்குவரத்து எப்போது? – வளைகுடா வாழ் இந்தியர்கள் கவலை!

ரியாத் (11 ஜூலை 2021): இந்தியாவில் கோவிட் பாதிப்பு ஒருபுறம் என்றால் கேரளாவில் ஜிகா வைரஸும் பரவி வருவதால் சவூதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு விமான போக்குவரத்து தொடங்கலில் சிக்கல் ஏற்படுமோ என்று இந்தியர்கள் கவலை அடைந்துள்ளனர். கொரொனா பாதிப்பு உலகை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியாவில் இரண்டாவது அலை பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. தற்போது இந்தியாவில் கொரானா குறைந்து வருவதால் திருப்தி அடைந்து வரும் வளைகுடா வாழ் இந்தியர்கள் கடந்த ஒன்றரை வருடமாக தடையில்…

மேலும்...