மாஸ்க் தேவையில்லை – குறையும் கொரோனா – சாதித்த அரசு!

நியூயார்க் (23 மே 2021):கொரோனா பரவல் தொடர்ந்து குறைவதால் அமெரிக்கா கொரோனாவுக்கு முந்தைய நிலையை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. 2 டோஸ் தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டவர்கள் பொது இடங்களில் மாஸ்க்குகளை அணியத் தேவையில்லை என அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு உலகிலேயே கொரோனாவால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா இருந்தது. அமெரிக்காவில் தற்போது வரை 3.38 கோடி பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கொரோனாவால் ஆறு லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன ஆனால்…

மேலும்...

ஒரே மாஸ்க்கை தொடர்ந்து அணிந்தால் என்ன ஆகும்? -எய்ம்ஸ் நிபுணர் எச்சரிக்கை!

புதுடெல்லி (22 மே 2021): இரண்டு, மூன்று வாரங்களுக்கு ஒரே முககவசத்தை அணிந்தால் கருப்பு பூஞ்சை ஏற்படலாம் என எய்ம்ஸின் நரம்பியல் அறுவை சிகிச்சை பேராசிரியர் டாக்டர் பி சரத் சந்திரா கூறியுள்ளார் இந்தியாவில் கொரோனா ஒருபுறம் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால் கருப்பு பூஞ்சை நோயும் தாக்கி வருவதோடு உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து இந்த நோயை கையாளுவதற்கான வழிக்காட்ட நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்தநிலையில் இரண்டு, மூன்று வாரங்களுக்கு ஒரே முககவசத்தை அணிந்தால் கருப்பு பூஞ்சை ஏற்படலாம்…

மேலும்...

தளர்வுகள் இல்லாத ஊரடங்கு – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை (22 மே 2021): , தமிழகத்தில் 24 ஆம் தேதி முதல் ஒருவாரம் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. நாட்டிலேயே தினசரி கொரோனா பாதிப்பு அதிகம் பதிவாகும் மாநிலமாக தமிழகம் தற்போது உள்ளது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கு வரும் 24-ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. இதனால், மருத்துவ நிபுணர்களுடன் முதல் அமைச்சர் மு.க…

மேலும்...

2021 ஆம் ஆண்டு ஹஜ் செய்ய வெளிநாட்டு யாத்ரீகர்களுக்கு அனுமதி!

ஜித்தா (21 மே 2021): உடல்நலம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் கீழ் வெளிநாடுகளில் இருந்து வரும் யாத்ரீகர்கள் இந்த ஆண்டு ஹஜ் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று அல்-வதன் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு வெளிநாட்டு யாத்ரீகர்கள் யாரும் மக்காவிற்கு அனுமதிக்கப்படவில்லை. வழக்கமாக 2.5 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் மக்காவில் ஹஜ்ஜிற்காக கூடுவர். ஆனால் கடந்த ஆண்டு 1000 உள்ளூர் யாத்ரீகர்கள் மட்டுமே சென்ற ஆண்டு…

மேலும்...

கொரோனா தொற்றில் இந்திய அளவில் முதலிடத்தில் இருக்கும் தமிழகம்!

சென்னை(19 மே 2021): இந்தியாவில் கொரோனா 2-வது அலை உச்சத்தை எட்டியுள்ள நிலையில்தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, 10 மாநிலங்களில் 74% புதிய பாதிப்புகள் பதிவாகி உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 33,059 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் நேற்று 31,337 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...

இந்தியாவின் மாறுபட்ட கொரோனாவுக்கு எதிராக ஃபைசர், மாடர்னா தடுப்பூசிகள் பயனுள்ளவை – ஆய்வு!

நியூயார்க் (18 மே 2021): இந்திய வகை கொரோனாவுக்கு எதிராக ஃபைசர், மாடர்னா தடுப்பூசிகள் செயல்படுவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் மேற்கொண்ட புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. NYU கிராஸ்மேன் ஸ்கூல் ஆஃப் மெடிசின் மற்றும் NYU லாங்கோன் மையத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி விஞ்ஞானிகள் இதனை உறுதிபடுத்தியுள்ளனர், இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் கூறுகையில் ,இந்தியாவின் மாறுபட்ட வகை கொரோனாவிற்கு எதிரான செயல்களில் ” பைசர் தடுப்பூசிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், ஏனென்றால் முந்தைய மாற்றப்படாத…

மேலும்...

மருத்துவமனைகளில் கொரோனா படுக்கை இருப்பு குறித்து அறிந்துகொள்ளும் அரசு இணையதளம்!

சென்னை (18 மே 2021): இந்தியாவில் கொரோனா பரவல் உச்சத்தை அடைந்து வரும் நிலையில் தமிழகத்திலும் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு எந்தெந்த மருத்துவமனைகளில் படுக்கை இருக்கைகள் உள்ளன ? என்பதை அறிந்து கொள்ளவும், படுக்கைகளை அந்தந்த பகுதிகளில் முன்பதிவு செய்து கொள்ளவும் வசதிக்காக இணையதளம் ஒன்றை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் முகவரி  http://ucc.uhcitp.in/ இதில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளை பூர்த்தி செய்து படுக்கைகளை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

மேலும்...

கொரோனா தடுப்பூசி தமிழகத்திலேயே தயாரிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

சென்னை (18 மே 2021): தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிற நிலையில் அதனை கட்டுப்படுத்தும் முயற்சியிலும் தமிழக அரசு முழு மூச்சாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஆக்சிஜன், தடுப்பூசி மருந்து உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க தமிழகத்தில் தடுப்பூசி மருந்து உற்பத்தி நிலையங்களை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவ உயர் தொழில்நுட்ப சாதனங்கள், ஆக்சிஜன்…

மேலும்...

நெதர்லாந்திலிருந்து தமிழகத்திற்கு வந்தது ஆக்சிஜன்!

சென்னை (17 மே 2021): இந்தியாவில் உள்ள மருந்து நிறுவனங்களில் இருந்து தடுப்பூசி கிடைப்பது தாமதம் ஆகும் என்பதால் முன்கூட்டியே தமிழக மக்களுக்கு போடுவதற்காக உலக மருந்து நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார். அதன்படி 5 கோடி டோஸ் மருந்துகளை வாங்க உலகளாவிய டெண்டர் விட மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி மருந்துகளை வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. ஜூன் 5-ந்தேதி டெண்டர் திறக்கப்பட்டு உரிய நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசி மருந்து கொள்முதல் செய்யப்படும்….

மேலும்...

கொத்து கொத்தாக எரியும் சடலங்கள் – வைரலாகும் பரபரப்பு வீடியோ!

காசிப்பூர் (16 மே 2021): உத்தரப்பிரதேசத்தில் ஒரு மயானத்தில் கொரோனா பாதித்து இறந்தோரின் உடல்கள்கொத்து கொத்தாக எரிக்கப்படும் வீடியோ வைரலாகி வருகிறது இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. தினந்தோறும் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை, ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லை. இதனால் மருத்துவமனை வாயிலிலேயே நோயாளிகள் இறக்கும் நிலை வடமாநிலங்களில் ஏற்படுகிறது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கங்கை நதிக்கரையோரத்தில் சடலங்கள் மிதப்பதாக செய்திகள்…

மேலும்...