எப்படி இருக்கிறார் S.P.B.? – மருத்துவமனை அறிக்கை!

சென்னை (01 செப் 2020): பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. பிரபல பாடகர் எஸ்.பி.பியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு எஸ்.பி.பி-யின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. அதனை தொடர்ந்து எஸ்.பி.பி குறித்து பல வதந்திகள் வெளியாகின. இதனால் அவ்வப்போது அவரது மகன் வீடியோவின் மூலம் மக்களுக்கு எஸ்.பி.பி உடல்நிலை குறித்து…

மேலும்...

தனியார் பேருந்து உரிமையாளர்கள் திடீர் முடிவு!

சென்னை (31 ஆக 2020): தனியார் பேருந்துகளை இயக்கப்போவதில்லை என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் நாளை முதல் மாவட்டத்துக்குள் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். இதில் மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து, சென்னையில் பெருநகர பஸ் போக்குவரத்து சேவை நாளை முதல், நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் நாளை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது…

மேலும்...

வழிபாட்டுத்தலங்களில் கடைபிடிக்க வேண்டிய புதிய வழிமுறைகள் – தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை (31 ஆக 2020): கொரோனா பரவலை தடுக்க, வழிபாட்டு தலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்பின்வருமாறு:- -தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து வருபவர்களை அனுமதிக்க கூடாது. -முக கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு அனுமதி இல்லை என்பதை அறிவிப்பு செய்ய வேண்டும். -65வயதுக்கு மேற்பட்டோர், 10வயதுக்கு உட்பட்டோர் வழிபாட்டுத் தலங்களுக்கு வருவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். – நுழைவாயிலில் கிருமி நாசினி வழங்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும்...

இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீட்டிப்பு!

புதுடெல்லி (31 ஆக 2020): இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் இருந்து கடந்த ஜூன் மாதம் முதல் மத்திய அரசு படிப்படியாக தளர்வுகளை அளித்து வருகிறது. கொரோனா கட்டுக்குள் வரவில்லையென்றாலும், மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஊரடங்கின் 4 ஆம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு நேற்று முன் தினம் வெளியிட்டது. இதில்,…

மேலும்...

பாஜக தலைவர் இல.கணேசனுக்கு கொரோனா தொற்று!

சென்னை (31 ஆக 2020): பாஜக மூத்த தலைவரான இல.கணேசனுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்று இந்தியாவில் பெருமளவில் பரவி வருகிறது. குறிப்பாக தமிழகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாஜக மூத்த தலைவரான இல.கணேசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு. சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும்...

கொரோனா ரிசல்ட் நெகட்டிவ் – வசந்தகுமார் இறந்தது எதனால்?

சென்னை (29 ஆக 2020) காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் கொரோனா ரிசல்ட் நெகட்டிவ் என வந்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை என்று அவரது மகன் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வசந்த் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் , “சொல்வதற்கு வார்த்தையே இல்லை. அப்பா 6.56-க்கு இயற்கை எய்தினார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அப்பா மிகவும் கவலைக்கிடமாக இருந்தார். திடீரென ஆக்சிஜன் அளவு குறைந்ததால் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கொரோனாவிலிருந்து மீண்டு மூச்சுவிட ஆரம்பிக்கும்போது பாக்டீரியா இன்பெக்‌ஷன்…

மேலும்...

ஐபிஎஸ் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா திடீர் நீக்கம்!

துபாய் (29 ஆக 2020): ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎஸ் கிரிக்கெட்டிலிருந்து சென்னை வீரர் சுரேஷ் ரெய்னா நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 13வது ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் 19-ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து அணிவீரர்களும் பயிற்சிக்காக அமீரகத்தில் தற்போது முகாமிட்டுள்ளனர். அந்த வகையில் சென்னை அணியும் சமீபத்தில் அமீரகம் சென்றடைந்தது. தொடருக்கான பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டிருந்த சூழலில், சென்னை அணியைச் சேர்ந்த தீபக் சஹர், அணி ஊழியர்கள்…

மேலும்...

அடுத்த நடவடிக்கை என்ன? – மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!

சென்னை (29 ஆக 2020): புதிய தளர்வுகள் மேற்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். கொரோனா தொற்று பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 25-ந் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு படிப்படியாக தளர்வுகளை அனுமதித்து வருகிறது. தற்போது தமிழகத்தில் தொடர்ந்து பொது போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே இ-பாஸ் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி மாநில…

மேலும்...

காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் கொரோனா பாதிப்பால் மரணம்!

சென்னை (28 ஆக 2020): கொரோனா பாதித்த காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் சென்னையில் உயிரிழந்தார். கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்த நங்குநேரி வசந்தகுமார் எம்.பி. கடந்த 10 ஆம் தேதி, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அவரின் உடல்நிலை மோசமானதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து சிகிச்சை பலனின்றி அவர் இன்று (ஆகஸ்ட் 28 ) உயிரிழந்தார். காங்கிரஸ்…

மேலும்...

இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 1023 பேர் பலி!

புதுடெல்லி (28 ஆக 2020): இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1023 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனாவால் இந்தியா அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 76826 கொரோனாவால் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் 24 மணி நேரத்தில் கொரோனாவால் 1023 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும்...