
டெல்லி ஜே.என்.யூ பல்கலைக் கழக தாக்குதல் விவகாரத்தில் திடீர் திருப்பம்!
புதுடெல்லி (07 ஜன 2020): டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் மீதான தாக்குதல் விவகாரத்தின் திடீர் திருப்பமாக இந்த தாக்குதலுக்கு இந்து ரக்ஷா தள் பொறுப்பேற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (05-01-2020) மாலை ஜே.என்.யூ பல்கலைக்கழத்தின் மாணவ, மாணவிகள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த நூற்றுக்கு மேற்பட்ட முகமூடி அணிந்த கும்பல், அங்கிருந்த ஜேஎன்யு மாணவர் சங்கத்தலைவர் அய்ஷி கோஷ், கல்லூரி மாணவர்கள், மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவ…