தமிழக அமைச்சரவையில் மாற்றம் – பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதல் பொறுப்பு!

சென்னை (14 டிச 2022):தமிழ்நாடு அமைச்சரவை, இன்று மாற்றம் செய்யப்பட உள்ளது. உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ இன்று தமிழ்நாடு அமைச்சராக தேர்வாக உள்ளார். இன்று காலை 9.30 மணிக்கு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளார். இவருக்கு விளையாட்டு, இளைஞர் நலன் ஆகிய துறைகள் நாளை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதன்பின், பல்வேறு அமைச்சர்களின் இலக்காக்கள் மாற்றப்பட உள்ளன. இந்த இலாக்கா மாற்றத்தின்போது புள்ளியில் துறை-யைக் கூடுதலாக கவனித்து வரும் ஐ பெரியசாமியிடம் இருந்து,…

மேலும்...

கொடுமையிலும் கொடுமை – திமுக மீது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

மதுரை (12 டிச 2022): மதுரையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த செல்லூர் ராஜூ, சென்னை நகர மேயர் காரில் தொங்கிக் கொண்டு பயணித்ததால், திமுகவைக் கடுமையாகச் சாடியுள்ளார். “திராவிட மாடல் முதல்வர், சென்னை மேயரை காரில் தொங்கி கொண்டு ஏற விட்டுள்ளார். கொடுமையிலும் கொடுமை பெருங்கொடுமை! மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஓடி வந்து காரில் தொங்கி கொண்டு வருகிறார். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திரும்பவும் ஆட்சிக்கு வந்ததாக…

மேலும்...

தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் – யாருக்கு எந்தெந்த துறை?

சென்னை (07 டிச 2022): தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ஏற்படலாம் என்றும் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சராகப் போவதாக பேச்சுகள் மீண்டும் எழத் தொடங்கியுள்ளன. அதுமட்டுமல்லாமல் கட்சியிலிருந்து விலகி மீண்டும் இணைந்துள்ளவர்களுக்கு கட்சிப் பதவி வழங்கப்பட்டதிலும் அதிருப்தி நிலவுகிறது. அவர்களையும் திருப்திபடுத்த வேண்டிய சூழலில் கட்சித் தலைமை உள்ளது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட உதயநிதி ஸ்டாலின்…

மேலும்...

திமுகவில் இணைந்த அதிமுக பிரபலம்!

சென்னை (07 டிச 2022): அதிமுகவை சேர்ந்த கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த, கோவையில் மாவட்டச் செயலாளராக இருந்த கோவை செல்வராஜ், கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்சியில் இருந்து விலகிய நிலையில், தற்போது முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.

மேலும்...

திமுக கூட்டணியில் புதிதாக இணையவுள்ள அந்த இரண்டு கட்சிகள்!

சென்னை (03 டிச 2022): திமுகவை எதிர்த்து பாஜக எகிறி அடித்துக் கொண்டு உள்ள நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து போராட திமுக தயாராகி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு 40 தொகுதிகளையும் கைபற்ற வேண்டும் என்று திமுக முனைப்போடு செயலாற்ற தொடங்கிவிட்டது. ஏற்கனவே கமல்ஹாசன் திமுக கூட்டணியில் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அடுத்த இலக்கை நோக்கி திமுக நகர தொடங்கியுள்ளது. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இப்போது கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன்…

மேலும்...

ஒரு கார்பரேட் கம்பெணி தமிழகத்தை ஆளுகிறது – எடப்பாடி பழனிச்சாமி!

கோவை (02 டிச 2022): ஒரு கார்பரேட் கம்பெணி தமிழகத்தை ஆளுகிறது என்று திமுகவை சாடி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். ஆளும் திமுக அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வைக் கண்டித்து, கோவையில் அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று (டிச.2) நடைபெற்றது. கோவை சிவானந்தா காலனியில் நடந்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித்…

மேலும்...

கீழக்கரை திமுக கவுன்சிலர் போதைப்பொருள் கடத்தவில்லை – சுங்கத்துறை அதிகாரிகள் தகவல்!

ராமநாதபுரம் (30 நவ 2022): ராமநாதபுரத்திலிருந்து கடத்தப்பட்ட பொருள் போதைபொருள் அல்ல என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி வார்டு திமுக கவுன்சிலர் சர்பராஸ் நவாஸ் மற்றும் கீழக்கரை திமுக முன்னாள் கவுன்சிலர் ஜெய்னுதீன் என்பவரும் இலங்கைக்கு கடல் வழியாக கொக்கைன் கடத்தியதாக செய்திகள் வெளியாகின. இதனை பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட, பல பாஜக பிரமுகர்களும் சமூக வலைதளங்களில் திமுகவுக்கு எதிராகவும், கவுன்சிலர் போதைப்பொருள் கடத்தியதாகவும் பரப்பி வந்தனர். இந்த நிலையில்…

மேலும்...

திமுக ஆதரவில் நடக்கிறது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை (05 நவ 2022): ஒபிஎஸ்ஸின் நடவடிக்கைகள் எல்லாம் திமுகவின் ஆதரவில்தான் நடக்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “இதற்கு முன் சசிகலாவிற்கு எதிராக தர்மயுத்தத்தை ஆரம்பித்தார். இதன் பின் மீண்டும் சசிகலா காலில் விழுந்து ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் என்றார். ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சசிகலாவை தான் குற்றம் சொல்லுகிறது. அதேபோல ஆட்சிக்கு எதிராக ஓட்டு போட்டார். அதனால் தர்மயுத்தம் 2.0 என்பது ஒரு கர்ம யுத்தம்….

மேலும்...

திசைமாறும் திருமாவளவன் – கலக்கத்தில் திமுக!

சென்னை (07 அக் 2022): தமிழக அரசியலில் சமீபத்தில் புயலை கிளப்பி வருபவர் விசிக தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்தாலும், திமுகவை விமர்சிக்கத் தொடங்கியுள்ளார். கடந்த 2 ஆம் தேதி நடைபெறவிருந்த ஆர் எஸ் எஸ் பேரணியை தடுத்து நிறுத்தியதில் திருமாவின் பங்கு மிக முக்கியமானது. எனினும் திருமா தலைமையில் நடைபெறவிருந்த சமூக நல்லிணக்க பேரணிக்கு தடை விதிக்கப்பட்டதற்கு அரசை விமர்சித்திருந்தார் திருமா. இந்நிலையில் அடுத்த மாதம் 6ம் தேதி தமிழகத்தில் நடக்கும் ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு…

மேலும்...

ஆளுநர் திமுக மோதல் – ஆளுநர் திடீர் டெல்லி பயணம்!

சென்னை (07 ஏப் 2022): தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா, கூட்டுறவு சங்க சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட 7 மசோதாக்கள் ஆளுநர் ரவி முன் நிலுவையில் உள்ளன. இதை வலியுறுத்தி கடந்த 4-ம் தேதி மக்களவையில் `தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை நீக்க வேண்டும்’ என்று திமுக-வினர் கோரிக்கை வைத்திருந்தனர். அதைத்தொடர்ந்து தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை ஆளுநர் நிலுவையில் வைத்துள்ளார்…

மேலும்...