கோவாவில் காலியாகும் பாஜக கூடாரம்!

பானஜி (22 ஜன 2022): கோவாவில் முன்னாள் முதல்வர் மனோகர் பரிக்கரின் மகன் உத்பல் பரிக்கர் பாஜகவை விட்டு விலக்கியுள்ள நிலையில் மேலும் 5 தலைவர்கள் பாஜகவிலிருந்து விலகியுள்ளனர். பாஜகவின் வேட்பாளர் அறிவிப்புக்கு பின், சீட் கிடைக்காத தலைவர்கள் ஒவ்வொருவராக கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர். ஒரே இரவில், கோவாவில் ஐந்து முக்கிய பாஜக தலைவர்கள் பாஜகவுக்கு எதிராக மாறியுள்ளனர். முன்னாள் முதல்வர் லக்ஷ்மிகாந்த் பர்சேகர், முன்னாள் அமைச்சர் தீபக் போஸ்கர், துணை சபாநாயகர் இசிடோர் பெர்னாண்டஸ்,…

மேலும்...

கோவா பாஜக முன்னாள் முதல்வர் மனோகர் பரிக்கரின் மகன் பஜகவிலிருந்து விலகல்!

பானஜி (21 ஜன 2022): கோவா பாஜக முன்னாள் முதல்வர் மனோகர் பரிக்கரின் மகன் உத்பல் பரிக்கர் பாஜகவிலிருந்து விலகியுள்ளார். மூன்று முறை கோவா முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தவர் மனோகர் பரிக்கர். இவரின் மகன் மகன் உத்பல் பரிக்கர். இவர் அடுத்த மாதம் நடைபெற உள்ள கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் அவரது தந்தையின் தொகுதியான பானஜியில் போட்டியிட சீட் கேட்டிருந்தார். ஆனால் பாஜக அவருக்கு சீட் தர மறுத்துவிட்டது. இதனால் ஆத்திரமுற்ற உத்பல் பரிக்கர் பாஜகவிலிருந்து…

மேலும்...

ஸ்டாலினுக்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவசாசன் ஆதரவு

சென்னை (20 ஜன 2022): அலங்கார ஊர்தி தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வலம் வரும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளதற்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். அதேவேளை நிராகரிப்பு விவகாரத்தில் திமுக அரசு அரசியல் ஆதாயம் தேடுவதாகவும் அவர் கூறியுள்ளார். மிகவும் பிரபலமான சுதந்திரப் போராட்ட வீரர்களான கப்பலோட்டிய தமிழர் வஉசி., வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் உருவங்கள் அடங்கிய அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது. இவர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது என்று கூறி மத்திய அரசு…

மேலும்...

பேரணி பொது கூட்டங்களுக்கு தடை – பாஜக புதிய யுக்தியில் தேர்தல் பிரச்சார வியூகம்!

புதுடெல்லி (18 ஜன 2022): ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களம் சூடுபிடித்துள்ள நிலையில் பேரணி மற்றும் பொது கூட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், புதிய பிரசார வியூகங்களை பா.ஜ.க. வரும் சட்டசபை தேர்தலில் எடுத்து வாட்டுகிறது. அதன்படி பூத் அளவில் பணிகளை வலுப்படுத்த பாஜக முடிவு செய்துள்ளது. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அடிமட்ட மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும், வாக்காளர்களுடன் இணைப்பில் இருக்கவும் உயர்மட்ட தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அடிமட்ட அளவில் செயல்பாடுகளை செயல்படுத்த…

மேலும்...

பாஜகவிலிருந்து நீககப்பட்ட தலைவரை இணைப்பதால் காங்கிரஸில் பிளவு!

உத்தரகாண்ட் (18 ஜன 2022): உத்தரகாண்ட் மூத்த தலைவர் ஹரக் சிங் ராவத், பா.ஜ.வால் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அவர் காங்கிரஸில் மீண்டும் இணையவுள்ளார். இதனால் உத்தரகாண்ட் மாநில காங்கிரசில் பிளவு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே காங்கிரசிலிருந்து விலகி பின்பு பாஜகவில் இணைந்த, முன்னாள் அமைச்சர் ஹரக் சிங் ராவத்தை மீண்டும் கட்சியில் சேர்க்க காங்கிரஸ் பிரசாரக் குழுத் தலைவர் ஹரிஷ் ராவத் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸின் மத்திய, மாநிலத் தலைமையின் ஒரு பிரிவினர்…

மேலும்...

முலாயம் சிங் யாதவின் மருமகள் பாஜகவில் இணைய வாய்ப்பு!

லக்னோ (16 ஜன 2022): சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவின் மருமகள் அபர்ணா யாதவ் பாஜகவில் சேர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முலாயம் சிங்கின் இளைய மகன் பிரதிக் யாதவின் மனைவி அபர்ணா யாதவ் மற்றும் பாஜக இடையே கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2017 உத்தரப் பிரதேச…

மேலும்...

ஐந்து மாநிலங்களில் பாஜகவுக்கு வாக்களிக்கப்போவதில்லை – விவசாயிகள் சங்கம் திட்டவட்டம்!

புதுடெல்லி (16 ஜன 2022): உத்திர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்கப்போவதில்லை என்று கூட்டு கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளது. டெல்லி எல்லையில் போராட்டம் முடிவுக்கு வந்து ஒரு மாதத்திற்கு மேலாகியுள்ள நிலையில், கூட்டு கிசான் மோர்ச்சா மற்றொரு போராட்டத்திற்கு தயாராகி வருகிறது. மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும்…

மேலும்...

உ.பி பாஜகவுக்கு நெருக்கடி – சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர் பாஜகவில் இருந்து விலகிய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்!

லக்னோ (14 ஜன 2022): உத்தரபிரதேசத்தில் பாஜக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அக்கட்சியில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் (எஸ்பி) இணைந்தனர். உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அமைச்சரவையில் உறுப்பினர்களாக இருந்த சுவாமி பிரசாத் மவுரியா மற்றும் தரம் சிங் சைனி ஆகியோர் லக்னோவில் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொண்டனர். இவர்களுடன் ராஜினாமா செய்த பாஜக எம்எல்ஏக்கள் பகவதி சாகர், வினய் ஷக்யா, முகேஷ் வர்மா, ரோஷன்லால் வர்மா…

மேலும்...

பாஜக அமைச்சரவையில் மூன்றாவது விக்கெட் – கலகலத்துப் போன உ.பி அரசு!

லக்னோ (13 ஜன 2022): உத்தரப் பிரதேச அமைச்சர் தரம் சிங் சைனி வியாழக்கிழமை பாஜகவில் இருந்து விளக்கியுள்ளார். மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் பாஜகவின் உறவை முறித்துக் கொண்ட ஒன்பதாவது எம்எல்ஏ ஆனார் தரம் சிங் சைனி. முந்தைய நாள், தரம் சிங் சைனி தனக்கு மாநில அரசு ஒதுக்கிய பாதுகாப்பு அதிகாரிகளையும், வீட்டையும் திருப்பிக் கொடுத்தார், இது அவர் பாஜகவில் இருந்து விலகப் போகிறார் என்ற ஊகத்தைத் தூண்டியது. தரம்…

மேலும்...

உன்னாவ் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயை வேட்பாளராக நிறுத்தும் காங்கிரஸ்!

உன்னாவ் (13 ஜன 2022): உ.பி., சட்டசபை தேர்தலில், உன்னாவ் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயை, காங்கிரஸ் வேட்பாளராக நியமித்துள்ளது. இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், உன்னாவ் மகளுக்கு பாஜக அநீதி இழைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். “இப்போது, [வன்புணர்வு செய்யப்பட்டவரின் தாயார்] நீதியின் முகமாக இருப்பார்,” என்று அவர் ட்வீட் செய்துள்ளார். பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் 2017 ஆம் ஆண்டு உன்னாவ் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்…

மேலும்...