சென்னை (04 மே 2020): தமிழகத்தில் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உலகை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவிலும் அதி வேகத்தில் பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3550 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,409 குணமாகி வீட்டுக்கு சென்றுள்ள நிலையில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று மட்டும் 527 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 266 பேருக்கும் கடலூரில் 122 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் அதி வேகமாக கொரோனா பரவி வருவதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.