தமிழகத்தில் இன்று புதிதாக 776 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Share this News:

சென்னை (21 மே 2020): தமிழகத்தில் இன்று புதிதாக 776 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய நிலவரத்தை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார் .

அந்த தகவலின்படி, மாநிலத்தில் இன்று புதிதாக 776 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 689 பேர் உள்மாநிலத்தை சேர்ந்தவர்கள். எஞ்சியோர் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர் ஆகும்.

இதனால் தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 967 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 282 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும், கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது


Share this News: