திருநெல்வேலி (21 மே 2020): டெல்லியிலிருந்து தமிழகம் வந்த தப்லீக் ஜமாத்தினருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியான நிலையில் நெல்லையில் அவர்கள் சொந்த வீடுக:ளுக்குச் சென்றனர்.
தமிழகத்திலிருந்து டெல்லி சென்ற தப்லீக் ஜமாத்தினர் நாடுதழுவிய ஊரடங்கால் சொந்த மாநிலம் வரமுடியாமல் தவித்தனர். அவர்கள் தமிழக இஸ்லாமிய அமைப்புகளின் கோரிக்கையை அடுத்து, தமிழக அரசின் முயற்சியில் தமிழகம் அழைத்து வரப்பட்டனர்.
இந்நிலையில் நெல்லியில் நெல்லை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தங்கவைக்கப்பட்டிருந்த தப்லீக் ஜமாத்தை சேர்ந்தவர்கள் கொரோனா தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்டது. இதனைஅ டுத்து நேற்று அவரவர்களின் சொந்த வீடுகளுக்கு திரும்பினர்.
அவர்களை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நெல்லை மாவட்ட தலைவர் கனி, துணைத்தலைவர் சாஹுல் ஹமீது உஸ்மானி, செயலாளர் ஹயாத், தமுமுக மாவட்ட தலைவர் ரசூல் மைதீன் உட்பட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் வழி அனுப்பி வைத்தனர்.
அதேபோல தென்காசி மாவட்டம் சேர்ந்த தப்லீக் ஜமாஅத்தினரையும், கரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதி தப்லீக் ஜமாத்தினரை தமுமுகவினர் தலைமையில் அவரவர்களின் வீட்டுக்கு கொண்டு சேர்க்கப்பட்டனர்.