புதுடெல்லி (08 பிப் 2020): டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
மொத்தம் உள்ள 70 இடங்களில் அக்கட்சிக்கு 49 இடங்கள் வரை கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டைம்ஸ் நவ் 44 இடங்கள் ஆம் ஆத்மிக்கும், 26 இடங்கள் பாஜகவுக்கும் கிடைக்கும் என்றும், நியூஸ் எக்ஸ் ஆம் ஆத்மிக்கு 53 – 57 வரையிலும், பாஜகவுக்கு 11 – 17 இடங்கள் வரையிலும் கிடைக்கும் என்று கணித்துள்ளது.
பல நேரங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பலிக்காமலும் போயுள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
டெல்லியில் பெரும்பான்மை பெறுவதற்கு ஒரு கட்சிக்கு 36 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.