அனுமதி இருந்தால் நானும் புர்கா அணிவேன் – ஏ.ஆர்.ரஹ்மான் அதிரடி!

Share this News:

சென்னை (23 பிப் 2020): மகள் கதீஜா அணியும் புர்கா குறித்த சர்ச்சைக்கு அமைதியாக இருந்த ஏ.ஆர்.ரஹ்மானும் தற்போது வாய் திறந்துள்ளார்.

சர்ச்சை எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின் சமூக வலைதள பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா பர்தா அணிவது குறித்து விமர்சித்து பதிவிட்டிருந்தார். இதற்கு கதீஜா சரியான பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் இவ்விவகாரத்தில் அமைதியாக இருந்த ஏ.ஆர்.ரஹ்மானும் தற்போது மகளுக்கு ஆதரவாக வாய் திறந்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “நான் உங்களுக்கு (கதீஜா) முழு சுதந்திரம் தருவதாக மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளதே பார்த்தீர்களா? என்ன பதில் அளிக்கப் போகிறீர்கள்? என்று என் மகளிடம் கேட்டேன். ஆனால் அப்பா, இனியும் முடியாது என்றார். ஆனால் அவர் தஸ்லீமா நஸ்ரினுக்கு பதில் அளிக்கும் முன்பு எங்களிடம் ஆலோசிக்கவில்லை. புர்கா அணிவது அவர் தான். அது அவர் விருப்பம். புர்கா மதம் தொடர்பானது என்பதை தாண்டி மனம் தொடர்பானது.

அவர் ஒரு பாடலை பாடினார். சுமார் 10 மில்லியன் பேர் அதை ரிங்டோனாக வைத்திருந்தார்கள். பெரிதாக பேசிப் பழகாத ஒரு சிறுமியை திடீர் என்று மக்கள் சூழ்ந்து கொண்டால், அவர் நிச்சயம் ஒதுங்கத் தான் செய்வார்.

ஒருவேளை ஆண்களும் புர்கா அணியலாம் என்று அனுமதி இருந்தால். நானும் அணிவேன்.அது எவ்வளவு பாதுகாப்பான உடை தெரியுமா? அதை உடுத்திக் கொண்டு எங்கும் சுதந்திரமாக சென்று வந்துவிடலாம். கதீஜாவின் இரக்க குணம் கண்டு நான் பலமுறை வியந்துள்ளேன். எங்கள் வீட்டில் வேலை செய்பவர்கள் வீட்டில் குடும்பத்தில் யாரும் இறந்துவிட்டால் உடனே ஓடோடி சென்று பார்த்துவிட்டு வருவார்.” என்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.


Share this News:

Leave a Reply