சென்னையில் போராட்டம் நடத்த தடை!

Share this News:

சென்னை (28 ஜன 2020): சென்னையில் வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப் பட்டுள்ளது.

குடியுரிமை சட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத சட்டங்கள், கொள்கைகளுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை நகரில் இன்று முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. போராட்டங்கள், உண்ணாவிரதம், மனிதசங்கிலி, பொதுக்கூட்டம் நடத்துவதற்கு சென்னை காவல் ஆணையர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.


Share this News:

Leave a Reply