முஸ்லிம்களின் சிறுபான்மை அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும் – பாஜக சாக்ஷி மகாராஜ்!

Share this News:

கான்பூர் (21 டிச 2020): முஸ்லிம்களுக்கு இந்தியாவில் சிறுபான்மை அந்தஸ்தை ரத்து செய்ய பாஜக எம்.பி. சாக்ஷி மகாராஜ் தெரிவித்துள்ளார்.

உன்னாவோவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினரான சாக்ஷி மகாராஜா, தொடர்ந்து முஸ்லீம் விரோத கருத்துக்களை பரப்பி வருபவர்.

இந்நிலையில், சனிக்கிழமை உன்னாவோவில் நடந்த விழாவில் ,பேசிய அவர், பாக்கிஸ்தானை விட இந்தியாவில் அதிகமான முஸ்லிம்கள் இருப்பதால் முஸ்லிம்களுக்கு இந்தியாவில் சிறுபான்மை அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும். அதிகரித்து வரும் மக்கள் தொகையை ஆராய ஒரு மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும். இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும் என்றார்.

விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு எதிராக பேசிய சாக்ஷி மகாராஜ் எம்.பி. விவசாய சட்டங்களைப் பற்றி விவாதிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும் எதிர் காட்சிகள் அப்பாவி விவசாயிகளின் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள் என்றும் சாக்ஷி மகாராஜ் கூறினார்.


Share this News:

Leave a Reply