கோவை (28 பிப் 2020): கோவையில் துப்புரவு தொழிலாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜகவை சேர்ந்த ஜோதி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை வரதராஜபுரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளி பெண், கழிவறையை துப்புரவு செய்துகொண்டிருந்தபோது, அங்கு சென்ற ஜோதி, அந்த பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதனை அடுத்து அந்த பெண் கூச்சலிடவே, பெண்ணை கடுமையாக தாக்கியும் உள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த பெண்ணின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஜோதியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.