குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னை மண்ணடியும் போராட்டக் களமானது!

Share this News:

சென்னை (16 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டை பொதுமக்கள் மீதான போலீஸ் தாக்குதலை எதிர்த்து சென்னை மண்ணடியில் நேற்று இரவு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை வண்ணாரப்பேட்டை சென்னை ஷஹீன் பாக்காக மாறி தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னை மண்ணடியில் நேற்று இரவு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். நேற்று முன்தினம் இரவு போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு கடும் கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். இதன் காரணமாக அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

போலீஸ் உயரதிகாரிகள் உள்பட ஏராளமான போலீசார் அங்கு குவிந்தனர். இதனால் சென்னை மண்ணடியில் பரபரப்பு ஏற்பட்டது.


Share this News:

Leave a Reply