புதுடெல்லி (16 பிப் 2020): டெல்லியில் சாதி, மத பேதமின்றி கல்வி, மருத்துவம் ஆகியவை இலவசமாக வழங்க முயற்சி மேற்கொள்வேன் என்று டெல்லி முதல்வராக பதவியேற்ற கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால், மூன்றாவது முறையாக டெல்லியின் முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்டார். கெஜ்ரிவாலுடன் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 6 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்களுக்கு துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பின்னர் மக்கள் முன்னிலையில் பேசிய கெஜ்ரிவால், கட்சி, சாதி, மத பேதமின்றி தில்லி மக்களுக்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு பாடுபடுவேன்.
நாட்டுக்கே டெல்லி ஒரு உதாரணமாக இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி ஒவ்வொரு டெல்லியின் 2 கோடி மக்களும் எனது குடும்பத்தினர்.
டெல்லி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க முடியாது. அதேபோன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற வருவபர்களிடம் கட்டணம் வசூலிக்க முடியாது. கல்வி, மருத்துவம் இரண்டும் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.
டெல்லியின் முழு வளர்ச்சிக்காக பிரதமர் மோடியின் உதவியை எதிர்பார்க்கிறேன்’ என்று பேசினார்.