சென்னை (16 பிப் 2020): CAA-NRC-NPRக்கு எதிரான கோடிக்கணக்கான கையழுத்துக்கள் குடியுரசு தலைவருக்கு அனுப்பப்பட்டது.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான கையழுத்துக்களை பெற்று குடியரசு தலைவருக்கு அனுப்பும் “கையெழுத்து இயக்கம்” நடைப்பெற்றது. தமிழகமெங்கும் பெறப்பட்ட கையெழுத்துக்களை இன்று 16.02.2020 இந்திய குடியரசு தலைவருக்கு அனுப்பும் நிகழ்வு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைப்பெற்றது.
இதில் திமுக தலைவர் திரு மு.க.ஸ்டாலின் MLA, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா Ex.MLA, திராவிட கழக தலைவர் வீரமணி, விசிக தலைவர் தொல். திருமாவாளவன் MP, மதிமுக தலைவர் வைகோ MP, திமுக பொருளாளர் துரைமுருகன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகரி . இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் அபுபக்கர் MLA, வீரபாண்டியன் சிபிஐ, தங்கபாலு, மமக துணை பொதுச் செயலாளர் தாம்பரம் எம்.யாக்கூப் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துக்கொண்டார்கள்.