குறைந்து வரும் கொரோனா – தமிழக மக்களுக்கு சற்று ஆறுதல்!

Share this News:

சென்னை (21 அக் 2020): தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் புதிதாக 3,094 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 6,94,030 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் புதிதாக 857 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 1,91,754 ஆக அதிகரித்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில், 263 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அந்த மாவட்டத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, 40,374 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,403 பேர், கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை, 6,46,555 ஆக அதிகரித்துள்ளது.


Share this News:

Leave a Reply