சென்னை (24 மே 2020): சென்னையில் கொரோனா பரவல் கட்டுப்படாத நிலையில் நேரு விளையாட்டு அரங்கை கொரோனா சிறப்பு வார்டாக மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் புதிதாக கொரோனா பாதிப்படைந்தவர்கள் பட்டியலில் சென்னை மட்டுமே தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க நகர், தேனாம்பேட்டை ஆகிய 4 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது.
அதன்படி சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில், ராயபுரத்தில் ஒரே நாளில் 131 பேருக்கு கொரோனா உறுதியானதால், அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,889 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் தினமும் பாதிப்பு அதிகரித்து வருவதால், நந்தம்பாக்கத்தில் இருக்கும் சென்னை வர்த்தக மையத்தை கொரோனா சிறப்பு வார்டாக மாற்றப்பட்டது. அதேபோல், நேரு உள் விளையாட்டு அரங்கத்தையும், 600 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு வார்டாக மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்நிலை பாசிட்டிவ் உள்ளவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.