புதுடெல்லி (23 பிப் 2020): பிரதமர் மோடியை பாராட்டி பேசியதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அருண் மிஸ்ராவுக்கு முன்னாள் நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சர்வதேச அளவில் தொலைநோக்கு பார்வை கொண்ட பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா பொறுப்புணர்வு மற்றும் நட்புமிக்க நாடாகவும் விளங்குகிறது என உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா புகழ்ந்து பேசினார்.
அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது இந்த பேச்சுக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் பலர் கண்டம் தெரிவித்து கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர். நீதிபதி அருண் மிஷ்ராவின் கருத்து இந்த ஆண்டின் மிக சிறந்த நகைச்சுவை எனவும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சாவந்த் தெரிவித்துள்ளார்.
நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர், பிரதமர் மோடியை இவ்வாறு புகழ்ந்து பேசுவது தேவையற்றது எனவும், இதுபோன்ற கருத்துகள் நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிக்கும் என நிதிபதிகள் தெரிவித்துள்ளனர்.