சென்னை (24 மே 2020): தமிழகத்தில் இன்று 765 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்த சுகாதாரத்துறை அறிவிப்பில், “தமிழகத்தில் இன்று புதிதாக 765 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,277 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் 6 பேரும், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் தலா ஒருவரும் என 8 பேர் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 833 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 7,839 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தமுள்ள 68 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று மட்டும் 12,275 மாதிரிகள் சோதனையிடபட்டுள்ளன.” என்று கூறப்பட்டுள்ளது.