நாகர்கோவில் (22 மார்ச் 2020): நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் கொரோனா சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் மரணம் அடைந்துள்ளார்.
வெளிநாட்டில் இருந்து குமரி மாவட்டத்துக்கு திரும்பி வந்த 49 வயதுடைய ஒரு ஆண், 9 மாத குழந்தை, கேரளத்தில் இருந்து வந்த 26 வயதுடைய ஒருவர் 59, 52 வயதுடைய 2 என 5 பேர் கொரோனா அறிகுறிகளுடன் சனிக்கிழமை மாலை அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இவர்களது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை க்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் குமரி மாவட்ட த்தைச் சேர்ந்த 59 வயதுடைய பெண் இரவு 10.15 மணிக்கு உயிரிழந்தார்.
இது குறித்து மருத்துவர்கள் கூறும்போது உயிரிழந்த பெண்ணுக்கு இருதயநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் இருந்தன ரத்த பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் தான் அவர் கரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தாரா என்பது குறித்து கூற முடியும் என்று கூறினர்.