இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 400 ஐ தொட்டது!

Share this News:

புதுடெல்லி (23 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 400 ஐ தொட்டுள்ளது.

எல்லைகளைக் கடந்த சவாலாக மாறி மனித குலத்தையே அலற வைத்துக் கொண்டிருக்கிறது கரோனா வைரஸ். உலக நாடுகளில் பெரும்பாலானவை திணறிக் கொண்டிருக்கின்றன.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 3 லட்சத்தையும், பலியானோர் எண்ணிக்கை 14 ஆயிரத்தைத் தாண்டியுள்ள நிலையில் இந்தியாவிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் திங்கள் கிழமை காலை வரை உள்ள தகவல்படி இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 400 ஐ தொட்டுள்ளது. இதுவரை 7 பேர் இறந்துள்ளனர்.


Share this News:

Leave a Reply